ராகு குரு சேர்க்கை: 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் அதிர்ஷ்ட ராஜ யோகம்
நவகிரகங்களில் நிழல் கிரகமாக இருக்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்பொழுதும் பின்னோக்கிய பயணத்தை செய்யக்கூடியவர். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 18 மாதங்கள் எடுத்து கொள்கிறார்கள்.
அப்படியாக இந்த மே மாதம் ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செல்ல உள்ளார். அதே போல் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்ல உள்ளார். பிறகு ராகு மற்றும் குரு சேர்க்கை சேர்ந்து நவபஞ்ச யோகம் உருவாகிறது.
இந்த யோகமானது சுமார் 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிறது என்றே சொல்லலாம். இந்த யோகத்தால் எந்த ராசிகள் மிக பெரிய அதிர்ஷ்டமும் ராஜ யோகமும் பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.
மகரம்:
குரு மற்றும் ராகுவின் நவபஞ்ச யோகம் இவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களை கொடுக்க உள்ளது. உங்களுடைய பொருளாதார நிலைமை சீராகும். சொத்து தொடர்பான சிக்கல்கள் நல்ல முடிவை பெரும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டாக்கும். சிலருக்கு நிலம் வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கும்பம்:
குரு மற்றும் ராகுவின் நவபஞ்ச யோகம் இவர்களுக்கு கல்வியில் சிறந்த முன்னேற்றதை கொடுக்கும். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்கள் சென்று படிக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் உண்டான சிக்கல்கள் விலகும். தொழில் தொடங்க பொன்னான காலம் இது.
கன்னி:
குரு மற்றும் ராகுவின் நவபஞ்ச யோகம் கன்னி ராசிக்கு வேலை பார்க்கும் இடத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். சமுதாயத்தில் நற்பெயர்கள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். நண்பர்கள் வழியாக உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |