குரு சுக்கிரன் இணைவு- லாபமும் அதிர்ஷ்டமும் பெற போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மிக முக்கியமான கிரகமாக சுக்கிரனும் குருவும் இருக்கிறது. அந்த இரண்டு கிரகமும் வருகின்ற ஜூன் மாதம் இணைய உள்ளார்கள். இந்த சேர்க்கை 12 வருடங்களுக்கு பிறகு மிதுன ராசியில் நடக்க இருக்கிறது.
இந்த சேர்க்கையின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருந்தாலும் ஒரு 3 ராசிகளுக்கு இந்த சுக்கிரன் குரு இணைவு வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் மிக பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் கொடுக்க இருக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
துலாம்:
சுக்கிரன் குரு சேர்க்கை துலாம் ராசிக்கு நல்லதோர் மாற்றம் கொடுக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் எல்லாம் சாதகமாக முடியும். எந்த ஒரு பணியையும் சரியாக திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வெளிநாடு சென்று படிக்கச் விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது.
கன்னி:
சுக்கிரன் மற்றும் குரு சேர்க்கை கன்னி ராசிக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற்று கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் தந்தையின் முழு ஆதரவையும் முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு நிதி நிலையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
மீனம்:
சுக்கிரன் குரு சேர்க்கை மீன ராசிக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் மற்றும் நிலம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு தொழில் நல்ல வருமானம் கிடைக்கும். அரசாங்க வேலைக்காக படிக்கும் மாணவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். செய்யும் காரியத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியும் புகழும் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |