12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் குரு சூரியன் சேர்க்கை- பண மழையில் குதிக்கும் ராசிகள் யார்?
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குருபகவான் தற்பொழுது மிதுன ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் நவரகிரகங்களின் தலைவராக இருக்கக்கூடிய சூரியனும் வருகின்ற ஜூன் மாதம் மிதுன் ராசியில் பயணம் செய்ய உள்ளார்.
இந்த சேர்க்கை 12 ராசிகளுக்கும் கட்டாயம் ஒரு தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் குரு சூரியன் இந்த அரிய வகை சேர்க்கையால் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு எந்த ராசியினர் மிக பெரிய தாக்கத்தையும் பொருளாதாரத்தில் மாற்றத்தையும் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
கன்னி:
கன்னி ராசிக்கு இந்த சேர்க்கை பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் கொடுக்க உள்ளது. சிலருக்கு வேலையில் முன்னேற்றம் சம்பள உயர்வு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதால் மிக சிறந்த பலனை பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசிக்கு குரு சூரியன் சேர்க்கை மிக பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளது. இவர்களுக்கு மனதளவில் தெளிவும் முன்னேற்றமும் கிடைக்க போகிறது. மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக அமையும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த குரு சூரியன் சேர்க்கை ஆடம்பர வாழ்க்கையும் வசதியான சூழ்நிலையும் உருவாக்கி கொடுக்க உள்ளது. புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். சிலருக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |