குரு கொடுக்கும் யோகங்கள்

Guru Peyarchi Parigarangal Guru Bhagavan
By Sakthi Raj May 01, 2024 05:00 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

கஜகேசரி யோகம் பெற்றவர்கள் செல்வம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர். ஒழுக்கமான வாழ்க்கை உள்ளவர்களாக இந்த “ஹம்ச” யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும்.கஜகேசரி யோகம்,குருச்சந்திரயோகம் குரு மங்களயோகம், ஹம்சயோகம் ,சகடயோகம்.  

குரு கொடுக்கும் யோகங்கள் | Gurubagavan Gurupeyarchi Rasipalan Yogajathagam

கஜகேசரி யோகம்

குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் "கஜகேசரி யோகம்" உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (01/05/2024)

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (01/05/2024)


குருச்சந்திரயோகம் 

சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்களில் காணப்பட்டால் "குருச்சந்திரயோகம்" உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

குரு மங்களயோகம்

குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் "குரு மங்கள யோகம்" ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.

குரு கொடுக்கும் யோகங்கள் | Gurubagavan Gurupeyarchi Rasipalan Yogajathagam

ஹம்சயோகம்

சந்தினுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த "ஹம்ச" யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

 சகடயோகம்

குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், "சகடயோகம்" ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US