அனுமன் ஜெயந்தி 2025: வீட்டில் அனுமன் படத்தை வைத்து வழிபாடு செய்யலாமா?
ஸ்ரீ ராம பிரானின் தீவிர பக்தரான அனுமன் மிகவும் வலிமை வாய்ந்தவர். இவரை வழிபாடு செய்வதால் நம் வாழ்க்கையில் எண்ணற்ற அதிசயங்கள் நடக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. அந்த வகையில் ஏப்ரல் 12 இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நம்முடைய மனம் தெளிவடைவதோடு, நினைத்த காரியத்தை சாதிக்கலாம். அப்படியாக, அனுமன் ஜெயந்தி அன்று நாம் செய்யவேண்டிய விஷயங்களும், செய்யக்கூடாத விஷயங்களை பற்றியும் பார்ப்போம்.
அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயர் ஆலயங்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், இந்த ஆண்டு நவராத்திரி சைத்ராவிற்கு பதிலாக அனுமன் ஜெயந்தியின் அன்று பவுர்ணமி வருவதால் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அனுமன் பிரம்மச்சரியம் கடைபிடித்து வாழ்ந்தவர். அதனால் அவருடைய படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் பொழுது சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது அனுமன் படத்தை நாம் படுக்கை அறையில் வைத்து வழிபாடு செய்யகூடாது.
அவ்வாறு, நாம் தெரியாமல் வைத்திருந்தாலும் அதை உடனே அகற்றி விடுவது நல்லது. அனுமன் ஸ்ரீ ராமரின் மிக பெரிய பக்தன். அவருடைய படத்தை தெற்கு திசையில் வைத்து வழிபட்டால் சிறப்பானது என்கிறார்கள்.
காரணம், அனுமன் அவருடைய சக்திகளை தெற்கு திசையை(இலங்கை) நோக்கித்தான் பயன் படுத்தினார். இந்த திசையில் நாம் அனுமன் படத்தை வைத்து வழிபாடு செய்வதால் நம்முடைய கெட்ட நேரத்தில் இருந்து அனுமன் நம்மை காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.
மேலும், நம் வீடுகளில் யாருக்கும் தோஷம் இருப்பதாக எண்ணினால் பஞ்சமுக ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபாடு செய்வது தோஷங்களை நிவர்த்தி செய்கிறது என்கிறார்கள். அது போல் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் ஆஞ்சநேயரின் படத்தையும் வைத்து வழிபாடு செய்யலாம்.
நம் வீடுகளில் வைத்திருக்கும் படத்திற்கு தினமும் செந்தூரம் வைப்பதால் அனுமன் மனம் மகிழ்ச்சி அடைவார் என்கிறார்கள். அதோடு, தினம் அவர் படத்திற்கு முன்பாக ஸ்ரீ ராம ஜெயம் சொல்லி வழிபாடு செய்வதால் அனுமனுக்கு மிகவும் பிடித்து மனம் மகிழ்ச்சி அடைகிறார்.
ஸ்ரீ ராமர் இருக்கும் இடமெல்லாம் அனுமன் கட்டாயம் இருப்பார். ஆதலால், அனுமனுக்கு எப்பொழுதும் அவரை வழிபாடு செய்பவர்களை காட்டிலும், ஸ்ரீ ராமரை வழிபாடு செய்பவர்களையே மிகவும் பிடிக்கும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |