Akshaya Tritiya: தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்?

Report

அட்சய திருதியை திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கியமான தினமாகும். அட்சய திருதியை என்றால்‌ வளர்க என்று பொருள்‌. அதாவது, அன்றைய நாளில்‌ நாம் செய்யும் செயல்களும், வாங்கும் பொருட்களும் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை.

இந்த அட்சய திருதியை சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு அட்சய திரிதியை 2025ம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 05:29 மணி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி பிற்பகல் 02:12 மணி வரை இருக்கும்.

Akshaya Tritiya: தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்? | Things To Buy On Akshya Tritiya 2025

உதய தேதியின்படி, இந்த பண்டிகை ஏப்ரல் 30 ஆம் தேதி மட்டுமே கொண்டாடப்படும். அட்சய திருதியை அன்று பலரும் தங்களால் முடிந்த அளவு தங்கத்தில் ஏதேனும் பொருட்கள் வாங்குவார்கள். அன்றைய தினத்தில் நாம் தங்கம் அல்லது வெள்ளி வாங்கினால் நம்முடைய வீடுகளில் மஹாலக்ஷ்மியின் அருளால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

வீட்டில் மறந்தும் இந்த இடங்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்காதீர்கள்

வீட்டில் மறந்தும் இந்த இடங்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்காதீர்கள்

அந்த வகையில் இந்த வருடம் தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாக ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 05:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை இருக்கிறது. எல்லோருக்கும் அன்றைய தினம் தங்கம் அல்லது வெள்ளி வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவர்களின் பொருளாதார சூழ்நிலையால் அவர்களால் நினைத்த பொருட்களை வாங்க முடியாமல் இருப்பார்கள்.

அவ்வாறு தங்கம், வெள்ளி வாங்க முடியதாவர்கள் அன்றைய தினம் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம்.

Akshaya Tritiya: தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்? | Things To Buy On Akshya Tritiya 2025

நாம் சமைக்க பயன் படுத்தும் பருப்பு வகைகள் செழிப்பின் அடையாளமாக இருக்கிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் அடையாளமாக கீரை வகை இருக்கிறது. பிறகு நம் வீடுகளில் செல்வத்தின் அடையாளமாக தானியங்கள் (அரிசி, பார்லி), மண்குடம், சங்கு, ஸ்ரீயந்திரம் திகழ்கிறது.

ஆக அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்க முடியவில்லை என்று வருத்தம் கொள்ளாமல், அதற்கு இணையான இந்த புனித பொருட்களை வாங்கினாலும் வீட்டில் மஹாலக்ஷ்மி தாயாரின் அருளால் நன்மை உண்டாகும் என்கிறார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US