தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் ஹனுமன் மந்திரம்
உலகில் நல்லது என்று ஒன்று இருந்தால் அதற்கு எதிராக நிச்சயம் தீய சக்திகள் என்று ஒன்று இருக்கும். அதை நாம் சமயங்களில் நன்றாக உணர முடியும். அதிலும் குறிப்பாக அமாவாசை தினத்தில் இந்த தீய சக்திகளின் தாக்கத்தை அதிகம் காணமுடியும்.
இந்த தீய ஆற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளத்தான் முன்னோர்கள் அமாவாசை திதி அன்று குலதெய்வ வழிபாட்டை செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள். அந்த வகையில் வீட்டில் யாரேனும் தீய சக்திகள் நடமாட்டம் இருப்பதாக உணர்ந்தால் அவர்கள் பற்றிக்கொள்ள வேண்டிய தெய்வம் தான் ஹனுமன்.
இவர் தீய ஆற்றல்களை அடியோடு விரட்டக்கூடியவர். அப்படியாக, எதிர்மறை ஆற்றலால் பாதிப்பிற்கு ஆளானவர்கள் அமாவாசை நாளில் ஹனுமனை பற்றி கொள்ள தீய சக்திகள் விலகுவதோடு மன தைரியத்தை பெறுவார்கள்.
அப்படியாக, நாளைய தினம் 29-3-2025 இந்த அமாவாசை திதியோடு சூரிய கிரகணமும் வரவிருக்கிறது. சனி பெயர்ச்சியும் நடக்கவுள்ளது. ஆக இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
ஆதலால், நாளை சூரிய உதயத்திற்கு பிறகு முன்னோர்கள் வழிபாட்டை செய்துவிட்டு சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஹனுமனின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யுங்கள்.
இதற்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு ஹனுமனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மந்திரத்தை படிக்க வேண்டும்.
ஹனுமன் மந்திரம்:
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாசயா
ஹனுமந்த முபாஸ் மஹே!
இந்த மந்திரத்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பது நன்மை அளிக்கும். காரணம் இந்த மந்திரத்தை படிக்க மனதில் தைரியம் பிறக்கும்.
அதோடு நம்மை சுற்றி உள்ள தீய சக்திகள் முற்றிலுமாக விலகும். இதை தினமும் படித்தாலும் நல்ல பலன் கொடுக்கும். அதிலும் முக்கியமாக அமாவாசை நாளில் படிக்க இன்னும் அதீத பலனை நாம் பெற முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |