திருப்பதியில் பெய்து வரும் கனமழை - அவதியுறும் ஏழுமலையான் பக்தர்கள்
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடும் மழையால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ளனர்.
அவதியுறும் திருப்பதி பக்தர்கள்
ஆந்திர மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து தரிசித்து வரவது வழக்கம்.
தற்போது ஆந்திரா மாநிலம் சித்தூர், திருப்பதி, நந்தியாலா, கர்னூல் போன்ற மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.
இதனால் நேற்று திருபத்தில் தரிசனைக்கு வந்த பக்தர்கள் முழந்தைகள் உட்பட பலரும் அவதி அடைந்துள்ளனர்.
கிட்டதட்ட பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்முள்ளனர்.
திருப்பதியில் நேற்று 62,161 பேர் தரிசனம் செய்தனர். 28,923 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.35 கோடி உண்டியல் காணிக்கையும் வசூலாகியுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |