உங்கள் ஜாதகத்தில் ராகு எந்த வீட்டில் இருக்கிறார்? அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்
ஜோதிடத்தை பொருத்தவரை ராகு மற்றும் கேது பகவான் நிழல் கிரகமாக இருக்கிறார்கள்.அவர்கள் இருக்கும் வீடு நமக்கு பல நன்மைகளையும் தீமைகளையும் ஒரு சேர தருகிறது. அந்த வகையில், பிரம்மாண்டத்தை குறிக்கக்கூடிய ராகு பகவான் உங்கள் ஜாதகத்தில் எந்த கட்டத்தில் அமர்ந்திருக்கிறார்களோ அந்த வீட்டினுடைய பலன் என்னவென்று பார்ப்போம்.
முதல் வீடு (லக்னம்):
ராகு பகவான் லக்னத்தில் இருந்தால் இவர்கள் அதிக அறிவாற்றல் கொண்டவர்களாகவும் அறிவுத்திறன் மிக்கவர்களாகவும் தனித்திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இரண்டாம் வீடு:
சிறந்த பேச்சாற்றல் இருக்கும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
மூன்றாம் வீடு:
படைப்பாற்றல் மற்றும் கலை திறமை இவர்கள் கொண்டு இருப்பார்கள். ஆனால், தகவல் பரிமாற்றங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நான்காம் வீடு:
சொத்து மற்றும் பொருள் வரவு அதிகமாக இருக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மன அமைதியின்மை இருக்கலாம்.
ஐந்தாம் வீடு:
இவர்களுக்கு இந்த இடத்தில் ராகு இருக்கும் பொழுது மிகுந்த கவர்ச்சியையும் புகழையும் கொடுக்கிறது. இருப்பினும் அவர்கள் உறவுகளில் மிகவும் கண்ணியமாக இருப்பது அவசியம்.
ஆறாம் வீடு:
எதிரிகளை அடியோடு வெல்லக் கூடிய வலிமையும் நிலையான தொழிலும் அமைகிறது.
ஏழாம் வீடு:
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை பெறுகிறார்கள். முடிந்த அளவு அகந்தையை விட்டு விட வேண்டும்.
எட்டாம் வீடு:
எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரலாம் கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்பம் கிடைக்கும். மேலும், மற்ற வீடுகளில் ராகு பகவான் அமர்ந்திருந்து கொடுக்கக்கூடிய பலன் என்னவென்று இங்கு காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |