தீராத நோய்களையும் தீர்க்கும் முருகன் கோவில்
முருக வழிபாடு மிக தொன்மையான வழிபாடு என்று கூறலாம்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முருகனின் ஆறுபடை வீடுகள்.
இவற்றில் அதிசயங்கள் அதிகம் நடக்கும் திருத்தலம் என்றால் எது பழனி முருகன் கோவில் தான்.
சிவனடியார்களுக்கு சித்தர் தலம் என்றால் திருவண்ணாமலை என்பது போல், முருக பக்தர்களுக்கு திருவண்ணாமலையாக கருதப்படுவது பழனி மலை.
சித்தர்கள் பலருக்கும் முருகப் பெருமான் குழந்தை வடிவில் காட்சி தந்த திருத்தலம் இதுவாகும்.
பழனி முருகன் கோவிலில் இருக்கும் பால தாண்டாயுதபாணியின் திருமேனி போகரால், நவராபாஷணம் கொண்டு செய்யப்பட்டது.
இவரின் திருமேனியில் பட்டு பக்தர்களுக்கு திருநீறு, பஞ்சாமிர்தம், தீர்த்தம், சந்தனம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
இதனால் பிரசாதங்கள் மருத்துவ குணம் நிறைந்தது, மேலும், பல நோய்களை குணமாக்கக் கூடியது.
இந்து தர்மத்தில், நோய்கள் நம்முடைய கர்மவினைகளின் பயனாக தான் ஏற்படுகிறது என்று சொல்கிறது.
இந்த கர்மவினைகள் தீருவதற்கு பழனி மலை முருகனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட நோயும் தீரும் என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |