வேண்டிய வரத்தை அள்ளி தரும் கற்பக விநாயகர்

By Kirthiga Apr 14, 2024 10:30 AM GMT
Report

தமிழ்நாட்டில் சிவகங்கை பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயிலின் அற்புதம் பற்றி பார்க்கலாம்.

சிவகங்கை கற்பக விநாயகர்

மலையின் அடிவாரத்தில் இருந்து குடையபெற்று சுமார் 1300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோயில் தான் சிவகங்கை கற்பக விநாயகர் ஆலயமாகும்.

இக்கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதாவது பிள்யைார்பட்டி என்ற கிராமத்தில் காணப்படுகிறது.

இந்த கோயிலானது சுமார் 1300 வருடங்களுக்கு முன்னரே தோன்றயதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றது.

வேண்டிய வரத்தை அள்ளி தரும் கற்பக விநாயகர் | History Of Pillayarpatti Katphaga Vinayagar Temple

மலை அடிவாரத்தில் மலையை குடைந்து சுமார் 2 மீற்றர் உயரமுள்ள பிள்ளையாரின் உருவத்தை செதுக்கியுள்ளனர். அந்த பிள்ளையார் சிலையானது வடக்குத் திசை நோக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கோயிலில் இருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் குன்றக்குடி முருகன் கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்பம்சங்கள்

முக்குறுணி மோதகம் செய்து வழிபடப்படும்.

அருகம்புல் மாலை அணிவித்து வழிபடப்படும்.

இங்கு வீற்றிருக்கும் விநாயகர் வலம் சுழி விநாயகர்.

6 அடி உயரம் கொண்ட கம்பீரமான மூலவர் குடவரைக்குள் இருக்கிறது.

இரண்டு கைகள் கொண்ட விநாயகர்.

மூலவர் வடக்கு முகமாக இருக்கிறார்.

வேண்டிய வரத்தை அள்ளி தரும் கற்பக விநாயகர் | History Of Pillayarpatti Katphaga Vinayagar Temple

குடவரைக் கோயில்.

தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோயில்.

பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமையை முற்காலத்தில் உள்ள பாண்டியர்கள் பெற்றுள்ளனர். 

பிள்ளையார்பட்டி என்பது தற்போதைய காலத்தில் அழைக்கும் பெயராகும்.

எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் போன்ற பல பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமாக இக்கோயில் மாறியது.

இத்தலத்தில் வீற்றிருக்கும் கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என பெரும் உண்டு. தேசி விநாயகர் என்றால் ஒளிமிக்க மற்றும் அழகுள்ள விநாயகர் என்று அர்த்தம்.

தெய்வங்கள் வீற்றிருக்கும் இடம்

கோயிலின் நடுப்பகுதியில் கிழக்கு திசையில் வீற்றிருக்கும் மகாலிங்கம் என்றும் பொலிவுடன் காணப்படும். திருவீசர் எனப்படும் எம்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு.

வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் இருப்பார். கிழக்கு நோக்கி மருதீசர் சந்நிதி காணப்படுகிறது. கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்களில் எந்தவொரு சிற்பங்களும் இன்றி அழகாக காட்சியளிக்கிறது. 

மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. இங்கு மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வாடாமலர் மங்கை வீற்றிருக்கிறார்.

மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. இங்கு மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வாடாமலர் மங்கை வீற்றிருக்கிறார்.

வேண்டிய வரத்தை அள்ளி தரும் கற்பக விநாயகர் | History Of Pillayarpatti Katphaga Vinayagar Temple

மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபை அமைக்கப்பட்டுள்ளது. கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் இருக்கிறது.

ஏழு நிலைகளுடன் இக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் வைத்து செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகர் கோபுரம் இருக்கிறது.  

இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் இருக்கும் கோபுர தளங்கள் செங்கல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரத்தின் வெளியில் வட திசையில் திருக்குளமும் காணப்படுகிறது. சதுர்த்தியின் போதும் இரவு நேரத்தில் நாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் வலம் வருவார்.

பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாள்கள் முன்பாக காப்புக் கட்டி, கொடியேற்றம் செய்யப்பட்டு திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US