இந்தியாவின் தேனி மாவட்டத்தில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் சன்னாசி திருக்கோவிலின் வரலாறு குறித்து தெரிந்து கொள்வோம்.
வட இந்தியாவில் வாழ்ந்த முன்னோர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் கண்டமநாயக்னூர் கிராமத்தின் அருகே உள்ள கிராமம் வேலாயுதபுரம் கிராமம்.
இந்த கிராமத்தில் பத்து தலைமுறைகளுக்கு முன்னால் உருவான கிராமமாக திகழ்கிறது என்று தற்போது உள்ள பெரியவர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த தகவலின்படி இந்த கிராமத்தை சார்ந்த இராஜகம்பள சமுதாய மக்களின் முன்னோர்களில் குஜ்ஜுபொம்முலு என்ற பிரிவினை சேர்ந்த இந்த கிராமத்தின் முன்னோர்கள் வட சீமை எனப்படும் வடஇந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்துள்ளனர்.
சன்னாசி தாத்தாவின் திருவிளையாடல்
வட இந்தியாவில் வாழ்ந்து வந்தபோது அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சன்னாசி கோவில் அமைத்து தினசரி சிறப்பு பூஜைகள் செய்து வந்துள்ளனர்.
ஒரு சமயம் அவர்கள் வாழ்ந்த பகுதியில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளன இதனை அறிந்த அக் கிராமத்தின் முன்னோர்கள் மேற்கண்ட பிரச்னைகள் வந்ததினால் இந்தப் பகுதி நமக்கு ஏற்ற பகுதி அல்ல என்று கூறி மனதில் எண்ணிக் கொண்டு முன்னோர்கள் தங்களுடைய ஒருசில பொருட்களைக் கூடையில் வைத்துக்கொண்டு நடைபயணமாக தென் தமிழகத்தை நோக்கியும் தென் மாவட்டங்களை நோக்கியும் வருகை புரிந்துள்ளனர்.
அதே சமயத்தில் அவர்கள் வசித்து வந்த இடத்தில் இருந்த சன்னாசி சுவாமிக்கு தினசரி பூஜைகள் செய்து வந்த நிலையில் அந்த முன்னோர்கள் இரண்டு நாட்களாக பூஜைகள் செய்வதற்கு அவர்கள் ஏன் வரவில்லை என்ற எண்ணத்தில் சன்னாசி சுவாமி பருந்து பறவை வடிவில் சன்னாசி சுவாமி அந்த முன்னோர்களை பல கிலோ மீட்டர் பறந்து வந்து தேடி வந்துள்ளார்.
சில கிலோ மீட்டர் பருந்து வடிவில் பறந்து வந்த சன்னாசி சுவாமிக்கு அடர் காட்டுப் பகுதியில் சிலர் சமையல் வேலை செய்யும் பொழுது புகை வந்துள்ளதை பார்த்துள்ளது.
பின்பு சன்னாசி சுவாமி கல் வடிவில் உருவாகி முன்னோர்கள் கொண்டு வந்த கூடையில் அமர்ந்துள்ளார் .
மேலும் அந்த கல்லினை பார்த்த முன்னோர்கள் ஆங்காங்கே கீழே இறக்கி வைத்துவிட்டு மீண்டும் நடைபயணமாக மேற்கொண்டு வந்துள்ளனர்.
மீண்டும் மீண்டும் அந்த கல் வடிவில் இருந்த சன்னாசி சுவாமி மேலும் கூடையில் உட்கார்ந்து கொண்டு வந்துள்ளது.
நடைபயணமாக வெகு நாட்கள் நடந்து வந்த இந்த பெரியவர்கள் ஜமீன் காலத்திற்கு முன்னால் மாவூற்று வேலப்பர் இருந்த காலத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பகுதிக்கு வருகை புரிந்தனர்.
முதலில் அந்த முன்னோர்கள் வருஷநாட்டுப் பகுதிகளில் குடியேர சென்றுள்ளனர். அந்தப் பகுதியும் முன்னோர்களுக்கு சரியாக இல்லாததால் மீண்டும் நடை பயணமாக எழுமலை பகுதிக்கு சென்றுள்ளனர்.
மாவூற்று வேலப்பர் அப்பகுதியில் இருந்த பொழுது அந்த முன்னோர்களிடம் தங்கள் பகுதிக்கு வந்த காரணத்தை கேட்டுள்ளார்.
நடந்த விபரங்களை அந்த முன்னோர்கள் மாவூற்று வேலப்பரிடம் கூறினார்கள். அப்பொழுது மாவூற்று வேலப்பர் கண்டமனூர் அருகே இருக்கும் சஞ்சீவி மலை என்று கூறப்படும் மலைப்பகுதியை நோக்கி அம்பை எய்துள்ளார்.
அந்தப் பகுதிதான் தங்களுக்கு வசிப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது என்றும் அந்தப் பகுதிக்கு சென்று கிராமத்தினை உருவாக்குங்கள் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.
மேலும் முன்னோர்களுக்கு தகுந்த இடத்தை காண்பித்த வேலப்பர் சன்னாசி சுவாமியிடம் நேரடியாக சென்று உங்கள் நம்பி உள்ள முன்னோர்களுக்கு தகுந்த இடத்தை காண்பித்து விட்டேன் என்றும் ஆதலால் எனக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அந்த முன்னோர்கள் வாழும் பகுதிக்கு உன்னுடைய பெயரை வைக்க அப்பகுதி மக்களிடம் கூறுவேன் என்று சன்னாசி சுவாமி கூறியதாக தெரிவித்தனர்.
அதனால் தான் அந்த கிராமத்துக்கு முருகன் பெயர் வரும் படி வேலாயுதபுரம் என்று பெயர் வைத்தனர்.
புனித ஊற்றுகள்
இந்தத் திருக்கோவில் உள்ள மலைப்பகுதியில் சன்னாசி தெப்பம் மீனாட்சி தெப்பம், தாமரை தெப்பம் மற்றும் பல்வேறு புனித ஊற்று இன்று வரை இருந்து வருகிறது.
தாமரை தெப்பமும் மீனாட்சி தெப்பமும் மழையின் உச்சியில் உள்ளது சன்னாச்சி தெப்பம் கீழே உள்ளது.
சன்னாசி தெப்பத்திற்கு பக்தர்கள் எளிதில் சென்று விடும் இடத்தில் அமைந்துள்ளதால் தேனி மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திருக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா மற்றும் பல்வேறு புனித விழாக்களுக்கு புனித நீர் இங்கிருந்து எடுத்துச் செல்வது வழக்கமாக இன்று வரை நடந்து வருகிறது.
இந்தப் புனித நீர் உற்பத்தியாகி மலை அடிவாரத்தில் வரும் பொழுது இன்றுவரை அந்த புனித அங்கேயே தேங்கி கொண்டு உள்ளது. இந்த புனித நீரை குடித்தால் பல்வேறு நோய்களும் தீரும் என்றும் தெரிவித்தனர்.
வரலாற்று நிறைந்த ஆலமரம்
இந்த திருக்கோவில் வளாகத்தில் மிகப்பெரிய ஆலமரமும் இன்று வரை இருந்து வருகிறது.
தற்பொழுது உள்ள இந்த ஆலமரம் சுமார் 70 வருடங்களுக்கு முன்பாக நடப்பட்டது என்றும் இந்த ஆலமரம நடுவதற்கு முன்பாக நம்முடைய முன்னோர்கள் மிகப்பெரிய ஆலமரத்தினை நட்டு பராமரித்து வந்த நிலையில் அந்த முன்னோர்கள் மறைந்த உடன் அந்த ஆலமரமும் காய்ந்து விட்டது என்றும் இதனை கற்றுக்கொண்டு தற்பொழுது புதிதாக ஆலமரம் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
இந்த ஆலமரத்தில் தொட்டில் கட்டி வைத்தால் குழந்தை பாக்கியமும் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கட்டி வைத்தால் எவ்வித நோயும் இல்லாமல் வாழலாம் என்றும் தெரிவித்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |