ராகு- கேது தோஷத்தை நீக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
உலகின் முழுமுதற் கடவுளான எம்பெருமானின் கோயில்கள் இவ்வுலகில் பல இடங்களில் இருக்கிறது.
அவ்வாறான திருக்கோயிலில் ஒன்று தான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலாகும்.
இக்கோயிலுக்கும் அலைமோதிக்கொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். எம்பொருமானின் கோயிலுக்கு செல்லாத சிவபக்தர்கள் இருக்கவே முடியாது.
குறிப்பாக தமிழ்நாட்டின் மன்னர்களால் போற்றப்பட்டு கட்டப்பட்ட கோயில்களே அதிகம்.
அந்தவகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில் சென்று வழிபடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.
காளஹஸ்தீஸ்வரர் கோயில் சிறப்பம்சங்கள்
இக்கோயிலில் மூலக்கடவுளாக சிவபெருமான் வீற்றிருக்கிறார். மூலவர் இருக்கும் பிரகாரத்திற்கு மேற்கு பகுதியிலும் வடக்கு பகுதியிலும் இருக்கும் பாம்பு புற்றில் இருந்து நாகங்கள் எம்பெருமானை தரிசித்து வருவதாக பக்தர்களால் கூறப்பட்டு வருகிறது.
இக்கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை காளஹஸ்தீஸ்வரர் என்று அழைப்பதால் ராகு கேது தோஷ நிவர்த்தி தலமாகவும் இது இருந்து வருகிறது.
மஹாசிவராத்திரி அன்று காலை 6 மணியில் இருந்து 6:30 மணி வரை மூலவர் மீது சூரிய ஒளி விழுந்துக்கொண்டே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அந்த சூழ்நிலையில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேகங்களும் தீபாராதனையும் செய்யப்பட்டு வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
மழை இல்லாத ஊரில் இருந்து வரும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வதன் மூலம் அவ்வூரில் மழை பெய்வதாகவும் ஐதீகம் உண்டு.
மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை குறித்து பயம் இருப்பவர்கள் திங்கட்கிழமை நடைபெறும் ருத்ர திரிசசி அர்ச்சனையில் கலந்துக்கொள்வது நல்லதாகும்.
வாழ்வில் இருந்து வரும் பிரச்சினைகள், துன்பங்கள் மற்றும் சர்ப்ப தோஷங்கள் நீங்குவதற்கு கிழக்கு நோக்கி இருக்கும் மூலவரை வழிபடலாம்.
கருவறையின் இடதுபுறம் முருகப்பெருமானும், வலது புறம் விநாயகரும் இருக்கிறார்கள். ஞானப் பூங்கோதையாக அம்பாள் இருக்கிறார். இவருக்கான தனி சன்னதி தெற்கு நோக்கி இருக்கிறது. தலவிருட்சமாக வில்வமரமும் இருக்கிறது.
தல வரலாறு
இக்கோயிலில் காளஹஸ்தீஸ்வரராக சிவபெருமான் சுமார் 1500 வருடங்களுக்கும் முன்பில் இருந்து அருள் பாலித்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன.
ராகு மற்றும் கேதுவின் அம்சமாக திகழப்படும் புஜங்கன் மற்றும் காலம் என்ற இரு நாகங்கள் தோஷத்தை போக்கிக் கொள்ளவதற்கு இந்த தலத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இக்கோயிலை கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த கரிகால சோழன் கட்டியுள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சி துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த கோயில் அமைந்துள்ள 30 ஏக்கர் நிலத்தை மைசூர் சமஸ்தானம் எம்பெருமானுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |