வீட்டில் லட்சுமி படத்தை மறந்தும் இந்த திசையில் வைத்துவிடக்கூடாது
மஹாலக்ஷ்மி செல்வத்தின் அதிபதி.பெருமாளின் மனைவி.அனைவரது வீட்டிலும் வியாபாரம் செய்யும் இடத்திலும் மஹாலக்ஷ்மி படம் கட்டாயம் இருக்கும்.மஹாலக்ஷ்மி இருக்கும் இடத்தில் நேர்மறை எண்ணங்கள் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
இருந்தாலும் நாம் மஹாலக்ஷ்மி படங்களை வீட்டில் நமக்கு ஏற்ற திசையில் மாட்டி விடுகின்றோம்.ஆனால் தாயார் படங்களை வைப்பதற்கு என்று உரிய திசைகள் இருக்கிறது.அந்த திசையில் தான் நாம் மஹாலக்ஷ்மி படத்தை வைக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் பொழுது தான் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்.இப்பொழுது மஹாலக்ஷ்மிக்கு உரிய திசை மற்றும் எந்த படங்கள் வீட்டில் வைத்து வழிபடலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
மகாலட்சுமிக்கு உகந்த மலராக தாமரை இருக்கிறது.ஆதலால் தாயார் தாமரை மலரில் வீற்றி இருப்பது போல் புகைப்படங்கள் வாங்கி வைப்பது நன்மையை தரும்.மேலும் தேவி நின்ற கோலத்தில் உள்ள படங்களை வீட்டில் வைப்பது தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு வைக்கும் பொழுது அவர் விரைவில் வெளியேறிவிடுவார் என்று வாஸ்து நிபுணர்கள் நம்புகிறார்கள். மேலும் நம்முடைய வீடுகளில் முடிந்த வரை பெரிய அளவு கொண்ட மஹாலக்ஷ்மி படம் வைத்து வழிபடுவது நல்லது.சிறிய படங்களை வைக்கும் பொழுது அவை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடும்.
மேலும் தெய்வங்களுடைய படங்களையும் அந்த இடத்தையும் எப்பொழுதும் சுத்தமாக வைக்க வேண்டும். நாம் முடிந்த வரை மஹாலக்ஷ்மி படத்தை நம்முடைய கண் பார்வைக்கு சற்று மேல் வைப்பது தான் நாம் தாயாருக்கு செய்யும் மரியாதை ஆகும்.
லட்சுமி படத்தை மற்ற தெய்வங்களுடன் வைப்பது சரியல்ல. அதை தனித்தனியாகவும் மரியாதைக்குரிய இடத்திலும் வைக்க வேண்டும்.
மேலும் மஹாலக்ஷ்மி படம் வைத்தால் வீட்டில் விளக்கு ஏற்றுவது அவசியம்.விளக்கு ஏற்றும் பொழுதும் தான் நம் வீடு நல்ல சக்திகள் கொண்டு சூழ்கிறது.
மேலும்,லட்சுமி தேவிக்கு உகந்த திசையாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கிறது.ஆதலால் இந்த திசை நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது. அவ்வாறு வடக்கு அல்லது வடகிழக்கில் இடம் இல்லை என்றால், படத்தை கிழக்கு திசையிலும் வைக்கலாம்.
இவ்வாறு நாம் வீடுகளில் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து செய்யும் பொழுது நமக்கு என்ன ஆபத்து நேர இருந்தாலும் அவற்றில் இருந்து காப்பாற்ற பட்டு நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக மாறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |