அதிர்ஷ்டம் பெருக வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்
நம்முடைய வீட்டில் பூஜை அறையும் சமையல் அறையும் பெண்கள் வசம்.அவர்கள் அதை அவர்களுக்கு ஏற்றார் போல் வடிவமைத்து கொள்வார்கள்.அப்படியாக வீட்டில் பூஜை அறை என்பது கோயிலுக்கு நிகரானது.அதை சரியான முறையில் பராமரித்து வாழிபாடு செய்வது என்பது முக்கியமான ஒன்று.
என்னதான் நமக்கு பிடித்த சுவாமி படங்கள் பூஜை பொருட்கள் வைத்தாலும் பூஜை அறையில் ஒரு சில பொருட்கள் இருக்க நிச்சயம் அவை வீட்டில் அதிர்ஷடம் உண்டாக்கும்.அந்த பொருள் எது என்பதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய வீடுகளில் வெளியே முக்கியமான வேலைக்கு செல்லும் பொழுது கட்டாயம் பூஜை அறையில் இறைவனை வணங்கி விபூதி வைத்த பின்பு தான் செல்வோம். அந்த வகையில் பூஜை அறையில் சுவாமி படங்கள் மற்றும் முன்னோர்கள் படங்களை வைத்தும் வழிபாடு செய்து வருவது வழக்கம்.
அதே போல் நாம் பூஜை அறையில் மிக முக்கியமாக வைக்க வேண்டிய பொருட்களில் கண்ணாடியும் ஒன்று.மேலும் பூஜை அறையில் கண்ணாடி வைப்பது பண்டைய காலத்தில் இருந்து பின்பற்ற கூடிய ஒரு நடைமுறை ஆகும்.
ஒருவர் வீட்டில் பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபாடு செய்வது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது.மேலும் அந்த வீட்டின் குலதெய்வம், பித்ருக்கள் போன்ற நம்முடன் இருக்கும் மறைமுக தெய்வங்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் கண்ணாடிக்கு சந்தனப் பொட்டு வைத்து பூஜை செய்தால், குல தெய்வம் அந்த கண்ணாடியில் முகத்தை காண்பிக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வளவு சக்திகள் நிறைந்த கண்ணாடியை நாமும் நம்முடைய வீட்டில் வைத்து இறைவனின் அருளை பெறுவதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் கொண்டு நிரப்புவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |