வாஸ்து:உங்கள் வீட்டு நிலைவாசலில் எந்த சுவாமி படங்கள் மாட்டலாம்?
நாம் வீடு கட்டும் பொழுது வாஸ்து பார்த்து தான் பணிகளை தொடங்குவோம்.அப்படியாக நம்முடைய வீட்டில் நிலை வாசல் அமைந்து இருக்கும் திசை மிகவும் முக்கியமானது.பொதுவாக பலரும் கிழக்கு பார்த்து வாசல் இருக்கும் வீட்டை விரும்புவார்கள்.
காரணம்,அந்த திசையில் அமைந்து இருக்கும் வீடு அதிர்ஷ்டம் நிறைந்தவையாகவும்,நிதி நிலையில் கஷ்டம் ஏற்படாமல் சந்தோஷ வாழ்க்கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.அந்த வகையில்,நாம் வீடுகளின் நிலைவாசலில் மேற்புறத்தில் சுவாமி படங்கள் மாட்டி வைப்பதால் நமக்கு பல விதமான நன்மைகள் உருவாகிறது.
எந்த திசையில் வீடு வைத்திருப்பவர்கள் எந்த சுவாமி படங்கள் மாட்டினால் என்ன நன்மைகள் உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம்.
1.கிழக்கு பார்த்து திசையில் அமைந்த வீடுகள் எப்பொழுதும் அதிர்ஷடம் பெற்று தரும்.அதோடு,அஷ்டலட்சுமிகளின் வரவும் வீட்டில் கிடைக்க பெறுவதாக நம்பப்படுகிறது.அப்படியாக,கிழக்கு திசையில் வீடு வைத்திருப்பவர்கள் நிலை வாசலின் வெளிப்புறத்தில் மேல் பக்கமாக அனைவரும் பார்க்கும் வண்ணம் செம்பு தகட்டினால் ஆன சூரிய பகவான் பதிக்க அவர்கள் வீட்டிற்கு அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
2.மேற்கு பார்த்து திசையில் வீடுகள் அமைந்து இருந்தால்,வாசலின் வெளிப்புறத்தில் மேல் பகுதியில் பஞ்சமுக ஆஞ்சநேயரின் திருவுருவத்தை பதிக்க வேண்டும்.அவ்வாறு பஞ்சமுக ஆஞ்சநேயர் படம் அனைவரும் பார்க்கும் விதமாக அமைத்தால் வீட்டில் ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
3.வடக்கு பார்த்து திசையில் வீடுகள் அமைந்து இருந்தால் வெளிப்புறத்தில் மேற்பகுதியில் குபேரன் அல்லது லட்சுமி குபேரன் படத்தை மாட்டி வைத்தால் வீட்டில் உண்டாகும் பொருளாதார தடைகள் விலகும்.மேலும்,செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கு வியாழக்கிழமை தோறும் நிலை வாசலில் குபேர தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் குபேர பகவானின் பரிபூர்ண அருளை பெறலாம்.
4.தெற்கு பார்த்து திசையில் வீடுகள் வைத்திருந்தால் தட்சிணாமூர்த்தியின் திருவுருவப்படத்தை வைப்பது குடும்ப உறுப்பினருக்கு நல்ல பலன்களை தரும்.வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஞானம் பெருகும்.வீட்டிற்கு வ்ரும் தீய சக்திகள் உங்களை விட்டு விலகும்.
இவ்வாறு நம்முடைய வீடு அமைந்து இருக்கும் திசைக்கு ஏற்ப சுவாமி படங்கள் மாட்டி வைப்பதால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகுவதோடு,கடவுளின் பரிபூர்ண அருளை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |