12 ராசியினரும் அவர்கள் வீட்டை எப்படி கோவிலாக மாற்றுகிறார்கள்.. தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அதை அவர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் பிரதிபலிப்பதை பார்க்கலாம்.
அப்படியாக, ஒவ்வொரு ராசிகினருக்கும் ஒவ்வொரு ஆன்மீகத் தன்மை இருக்கிறது. அதை அவர்கள் வீடுகளிலே நாம் கவனிக்க முடியும். அந்த வகையில் எந்த ராசியினர் வீட்டையே கோவிலாக மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
பூஜை அறையை இவர்கள் எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வம் காட்டக்கூடியவர்கள். அவர்கள் பூஜை அறை அமைப்பு பார்ப்பதற்கே கோவிலாக இருக்கும்.
ரிஷபம்:
இவர்கள் வீடுகளை அலங்கரிக்கவும், நறுமணமாகவும் வைத்துக் கொள்வதற்கு இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மிதுனம்:
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்கும் விதம் மிகவும் அற்புதமாகவும் மரியாதைக்குரியதாகவும் இருக்கும். அந்த விதத்தில் அதுவே அவர்களுடைய வீட்டை கோவிலாக மாற்றுகிறது.

கடகம்:
குடும்ப உறுப்பினர்களை அக்கறையாக இவர்கள் பார்த்துக் கொள்வதில் யாரும் இவர்களைப் போல் வர முடியாது. குடும்பத்தின் மீது வைத்திருக்கக் கூடிய அந்த பயபக்தியே இவர்களுடைய வீட்டை ஆலயமாக மாற்றுகிறது.
சிம்மம்:
இவர்களுக்கு எப்பொழுதுமே நேர்மறை எண்ணம் அதிகம் இருக்கும். அந்த ஒரு எண்ணம் தான் இவர்களுடைய வீட்டை கோவிலாக மாற்றுகிறது.
கன்னி:
இறைவனுக்கு செய்யக்கூடிய தொண்டு தான் இவர்கள் மனதை கோவிலாக மாற்றுகிறது.
துலாம்:
இவர்கள் எப்பொழுதுமே மங்கல இசையை அதிகம் கேட்பதில் ஆர்வம் மிக்கவர்கள். இவர்களுடைய வீடுகளில் இருக்கும் இடங்களில் எப்பொழுதும் தெய்வீக இசை ஒலித்துக் கொண்டு இருக்கும். அந்த இசையே இவர்களுடைய வீட்டை கோவிலாக மாற்றுகிறது.
விருச்சிகம்:
இவர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு அதிகம் உண்டு. அந்த எண்ணமே இவர்களுடைய வீட்டை புனிதமாக மாற்றுகிறது.

தனுசு:
இவர்களுக்கு குடும்பம் தான் கோவிலாக கருதக்கூடியவர்கள். ஆதலால் வீடு என்றாலே இவர்களுக்கு கோவிலில் செய்யக்கூடிய ஆலய பணியை போல் வீட்டை கவனித்துக் கொள்கிறார்கள்.
மகரம்:
இவர்கள் வீட்டினுடைய கடமைகளை தர்மமாக கருதி குடும்பத்தினருக்கு எல்லா சேவைகளையும் செய்வதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். கும்பம்: அடுத்தவருக்கு உதவக்கூடிய எண்ணம் இவர்களுடைய வீட்டை புனிதமாக மாற்றுகிறது.
மீனம்:
இவர்களின் எல்லையற்ற கருணை குணம் தான் இவர்களுடைய இருக்கும் இடத்தை தெய்வீக ஆற்றல் கொண்டு நிரப்ப செய்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |