மகாபாரதத்தில் காந்தாரிக்கு 100 மகன்கள் ஒரே நேரத்தில் பிறந்தது எப்படி?
மகாபாரதம் என்னும் மிகப்பெரிய காவியத்தில் காந்தாரி மற்றும் திருதராஷ்டிரருக்கு பிறந்த குழந்தைகள் 100 பேரையும் கௌரவர்கள் என்று தான் கூறுவார்கள்.
இந்த 100 குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிறந்தது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
100 மகன்கள் ஒரே நேரத்தில் பிறந்தது எப்படி?
புராணத்தின் படி காந்தாரி வியாச முனிவருக்கு நிறைய சேவை செய்ததால், வியாச முனிவர் மகிழ்ச்சியடைந்து அவருக்கு தெய்வீக வரம் கொடுத்திருந்தார்.
அந்த வரமானது காந்தாரி 100 மகன்களுக்குத் தாயாவாள் என்பது தான்.
இதற்குப் பிறகு காந்தாரி கர்ப்பமானாள். ஒரு பெண் கர்ப்பமானால் 9 மாதங்கள் இருப்பார். ஆனால் காந்தாரி 9 மாதங்களுக்குப் பதிலாக 2 ஆண்டுகள் கர்ப்பமாக இருந்ததாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஓர் காலப் பகுதியில் காந்தாரிக்கு பிரசவ வலி ஏற்பட ஆரம்பித்ததும் காந்தாரியின் வயிற்றில் இருந்து ஒரு சதைப்பகுதி பிறந்தது.
அதாவது காந்தாரிக்கு குழந்தை இல்லை, ஆனால் சாதாரண சதைப்பகுதி பிறந்தது. இதை பார்த்து அவருடைய கணவர் திருதராஷ்டிரரும் அஸ்தினாபுரத்தில் இருந்த மற்றவர்கள் பயந்தார்கள்.
ஆனால் காந்தாரி தனது சக்தியை பயன்படுத்தி, அந்த தசைப்பகுதியை 101 பாகங்களாகப் பிரித்து மண் பானைகளில் வைத்திருந்தாள்.
பாண்டு மற்றும் குந்தி ஆகியோருக்கு யுதிஷ்டிரர் பிறந்ததும், அந்தக் குடங்களில் இருந்தும் காந்தாரியின் குழந்தைகள் ஒவ்வொன்றாகப் பிறக்கத் தொடங்கின.
கௌரவ சகோதரர்கள் 100 பானைகளில் பிறந்த இடத்தில், 101 ஆவது பானையில் பெண் குழந்தை பிறந்தது. அதாவது துஷாலை ஒரு பானையிலிருந்து பிறந்தார்.
முந்தைய பிறவியில் காந்தாரி உயிர்களைக் கொன்று பாவம் செய்ததால், துவாபரயுகத்தில் அதன் பலன் கிடைத்துள்ளதாகவும். எனவே தான் கௌரவர்களின் பிறப்பில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டதாகவும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |