சிலர் சொல்வது அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன தெரியுமா ?
நாம் சில மனிதர்களை பார்த்திருப்போம். அவர்கள் நம்மிடம் ஒரு நல்ல விஷயம் அல்லது கெட்ட விஷயம் சொல்கிறார்கள் என்றால் அவை சிறிது காலங்களில் நம் வாழ்க்கையில் நடப்பதை நம் காணலாம். அவர்களால் எப்படி இவ்வாறு சரியாக சொல்ல முடிகிறது.
அவர்களிடம் இருக்கக்கூடிய தெய்வீக ஆற்றலால் அவர்களுடைய வாக்கு பலிதம் நடக்கிறதா? என்று நமக்குள் ஆயிரம் கேள்விகள் இருக்கும். அப்படியாக ஒருவர் சொல்வது அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
மனிதனுடைய ஆன்மாவை நாம் எவ்வளவு தூய்மை செய்கின்றோமோ அவ்வளவு பலன்கள் நமக்கு கிடைக்கிறது. அப்படியாக மனிதன் ஆன்மா எப்பொழுது தூய்மை அடைகிறது?
எவர் ஒருவர் ஒழுக்கத்தோடும் ஆன்மீக இறை சிந்தனைகளோடும் தங்களை எப்பொழுதும் இறைவழிபாட்டில் ஈடுபடுத்துகிறார்களோ அவர்களுடைய ஆன்மா ஒவ்வொரு நாளும் மேன்மை அடைந்து தூய்மை அடைகிறது.
அப்பொழுது அவர்களால் கட்டாயம் தியானத்தில் அமரும் பொழுது எதிர்கால சில நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும். இது பக்தியினால் அவர்களுக்கு கிடைக்க கூடிய வரமாகும். இதைத்தான் சித்தர்களும் தவமிருந்து உலகத்தில் நடக்கக்கூடிய பல விஷயங்களுக்கு முன்னதாகவே அறிந்து நமக்கு சில விடைகளையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அப்படியாக இந்த உலகத்தில் எந்த கிரகங்கள் நமக்கு எப்பேர்ப்பட்ட பாதிப்புகள் கொடுக்கக்கூடிய நிலையில் இருந்தாலும் ஒருவர் ஒழுக்கத்தோடும் மனதில் நல்ல எண்ணத்தோடு இறை நம்பிக்கையோடும் இருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய எண்ணமும் சொல்லும் நினைத்தபடியே நடக்கக்கூடிய பாக்கியத்தை இயற்கையால் பெறுகிறது.
ஆக ஒவ்வொரு மனிதனும் தியானத்தில் ஈடுபட்டும், மனதில் நல்ல சிந்தனை விதைத்தும், பிறருக்கு உதவக்கூடிய நல்ல குணத்தை கொண்டும் இறை சிந்தனையோடும் இருக்கையில் அவர்களாலும் தன்னை உணர்ந்து பிரபஞ்சத்தை தெரிந்து கொள்ள முடியும்.
அதோடு இறைவன் அருகில் சென்று அவன் அருளை முழுமையாக உணர முடியும். அவ்வாறு பெரும் பாக்கியம் தான் இந்த பிறவியில் நமக்கு கிடைக்க கூடிய ஒரு அற்புதமான பரிசாகும்.
ஆக எப்பொழுதும் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதர்களிடமும் ஒவ்வொரு உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள். பஞ்சபூதங்களும் உங்களுக்கு துன்பம் என்றால் உதவுவதற்கு வந்து நிற்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







