சனிக்கிழமை எப்படி பெருமாளுக்கு உரிய நாளாக மாறியது என்று தெரியுமா?
பொதுவாகவே, நாம் சனிக்கிழமை சனிபகவான் வழிபாட்டுக்குரியது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சனிக்கிழமை உலகளந்த பெருமாளுக்கு உகந்த நாளாகவும் இருக்கிறது.
அதிலும், புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷமான நாள் ஆகவும் பெருமாளை சேவித்து அவருடைய அருளை பெறுவதற்கு மிகச் சிறந்த நாளாகவும் இருக்கிறது. அப்படியாக, சனிக்கிழமை எப்படி பெருமாளுக்கு உரிய நாளாக மாறியது என்பதை பற்றி பார்ப்போம்.
ஒருமுறை சனிபகவான் கலியுகத்திற்கு செல்ல கிளம்பி கொண்டிருக்கிறார். அப்பொழுது எதிர்நோக்கி வந்த நாரதரை பார்க்கிறார். நாரதரிடம் தான் பூலோகத்திற்கு செல்வதை பற்றி கூற, நாரதரும் சரி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பூலோகத்தில் செல்லலாம். ஆனால், தவறியும் திருமால் பக்கம் சென்று விடாதீர்கள் என்று கூறினார்.

அதோடு மட்டும் நிறுத்தாமல் நாரதர் உங்களுடைய பார்வை கூட திருமால் பக்கம் விழாமல் இருப்பதே நல்லது என்றும் எச்சரித்து விட்டார். பொதுவாகவே, ஒரு மனிதனிடம் ஒரு விஷயத்தைப் பற்றி மேலோட்டமாக செய்யக் கூடாது என்று சொல்லும் பொழுது அதை ஆராய்ந்து செயல்படுத்தி பார்க்க வேண்டும் என்று ஆவால் உண்டாகும்.
இதை மனிதர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த குணத்தை பார்க்கலாம். இது சனிபகவான் இடத்திலும் இருந்தது. நான் சனீஸ்வரன் நான் யாரை பிடித்தாலும் அவர்கள் எனக்கு கட்டுப்பட வேண்டியது அவசியம் என்று திருமலையில் பாதம் பதித்தார். ஆனால் அவர் பாதம் பதித்த அடுத்த நொடியில் தூக்கி ஏறிய படுகிறார்.
மற்றவர்களை துன்பப்படுத்தி அவர்கள் துன்பத்திலிருந்து மகிழ்ச்சி காணும் நீ திருமலையில் இருப்பது யார் என்று அறியாமல் உன்னுடைய திருவிளையாடலை என்னிடம் காட்டுகிறாய் என்று திருவேங்கடம் மிகுந்த கோபம் கொள்கிறார். அதை கண்ட சனீஸ்வரருக்கு பயம் தாங்கவில்லை.
உடனடியாக திருவேங்கடன் காலை பற்றி கொண்டு எல்லோரையும் காத்தருளும் பரம்பொருள் என்னையும் காத்தருள வேண்டும் என்று பாதத்தைப் பிடித்து மன்னித்தருளும்படி வேண்டினார்.

அப்பொழுது, பெருமாள் சனிபகவான் பிறந்த தினமான சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமாளை வழிபாடு செய்தால் அவர்களின் குறைகளை தீர்த்து அவர்களுக்கு அருள் வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
அதனால் அன்று முதல் பெருமாளுக்கு உரிய நாளாக சனிக்கிழமை மாறிற்று. ஆக அஷ்டமத்து சனி, கண்டக சனி, பாத சனி, ஜென்ம சனி என்று சனிபகவானால் துன்பப்படக்கூடிய எந்த ஒரு பக்தர்களும் சனிக்கிழமை அன்று பெருமாளை வழிபாடு செய்தால் சனி பகவானால் ஏற்படக்கூடிய பிரதோஷங்களும் கடினமான பார்வை விலகி அவர்களுக்கு நன்மை கிடைக்கும்.
இன்னும் சொல்லப்போனால் ஒருவர் சனி பகவான் பிடியிலிருந்து வெளிவருவதற்கான எளிதான வழி என்னவென்றால் சனிக்கிழமை திருமாலை வழிபாடு செய்வது மட்டுமே ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |