நினைத்தது நடக்க வேண்டுமா?புது வருடத்தில் இருந்து இதை கடைப்பிடியுங்கள்
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஒருவித ஆசைகள் நிச்சயம் இருக்கும்.அந்த ஆசைகள் நிறைவேற பல முயற்சிகள் எடுப்போம்.அவை நிறைவேறாமல் கொஞ்சம் கால தாமதம் ஆகும் பொழுது அதுவே கனவாக மாறும்.
அப்படியாக நினைத்தது நிறைவேற நாம் என்ன செய்யவேண்டும்?இத்தனை நாள் அதை தவற விட்டு இருந்தாலும் இந்த புது வருடம் முதல் நாளில் இருந்து பின்பற்ற கட்டாயம் நாம் நினைத்தது நிறைவேறும்.அதை பற்றி பார்ப்போம்.
ஒரு மனிதனின் கனவுகள் பெரிதாக,அதற்கான முயற்சிகளும்,போட்டிகளும் மிக கடுமையாக இருக்கும்.அந்த போட்டி பிறரிடம் போட்டு கொள்வது அல்ல.நாம் நம்முடன் போட்டு கொள்வது தான்.அதாவது சிந்தனை, உணர்வுகள் எல்லாம் சமநிலையில் இருக்க வேண்டும்.
அவை சமநிலையில் இல்லாமல் போக தடுமாற்றம் உண்டாகும்.அதனால் கோபம்,எரிச்சல்,அமைதியின்மை உருவாகும்.அப்பொழுது எவ்வளவு முயற்சி செய்தாலும் நாம் நினைத்ததை அடையும் இலக்கு தள்ளி கொண்டே போகும்.
ஆக ஒரு மனிதனுக்கு வெற்றி எப்பொழுது கிடைக்கும் என்றால் மன அமைதியோடும்,மனதில் கோபம் வஞ்சகம் இல்லாமல் இருக்கும் பொழுது அவன் நினைத்தது சாத்தியம் ஆகும். சரி, இவை எல்லாம் நினைத்தவுடன் ஒரு நிலைக்கு கொண்டு வரமுடியுமா?என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
இந்த நேரத்தில் பொறுமை தான் அவனின் மிக பெரிய துணை.ஒவ்வொரு நாளும்,அவன் எதை மாற்றி கொள்ளவேண்டும் என்று நினைக்கிறானோ அதை மாற்றி கொள்ள ஒரு வாய்ப்பு நமக்கு நாமே கொடுத்து கொள்ள வேண்டும்.
அத்துடன் நம்முடைய இடைவிடாத முயற்சி கைவிடாமல் நகர்த்தி கொண்டே இருக்கவேண்டும். சிலருக்கு சில காலங்கள் ஆகலாம்,சிலருக்கு இன்னும் கூடுதலாக சில காலம் எடுக்கலாம்.ஆனால் இலக்கு அடைவது நம்முடைய நோக்கம் என்றால் அதன் பயிற்சியை எப்பொழுதும் கைவிடாமல்,ஒவ்வொரு நாளையும்,ஒவ்வொரு நிமிடத்தையும் வாய்ப்பாக கருத வேண்டும்.
இதில் மிக முக்கியமான ஒன்று அதிகம் பேசாமல் இருத்தல்.அளவான இடங்களில் தேவையான பொழுதில் நம்முடைய பேச்சு சரியாக அமைய வேண்டும்.நாம் இவ்வாறு செய்ய தொடங்கினாலே நாம் பாதி கடலை தாண்டி விடலாம்.
இதற்கெல்லாம் மேல்,இறைவன்.அவனை மனதார நம்ப வேண்டும்.நடக்கும் துன்பம் ஒரு விடிவு காலத்திற்கு என்று உறுதி கொள்ள வேண்டும்.பொதுவாக,இறைவனுக்கு எப்பொழுதும் நம்பிக்கையானவர்களையும், பொறுமைசாலிகளையும்,மௌனம் காப்பவர்களையும் மிகவும் பிடிக்கும்.அவன் அறிவான் இவை மூன்றும் இருந்தால் அவன் எப்பேர்ப்பட்ட இடத்தையும் அடைந்து விடலாம் என்று.
ஏன்?நம்பிக்கையுடையவர்களை கீழே தள்ளி விடலாமே தவிர அவர்களை மண்ணில் புதைத்து விட முடியாது என்று அந்த கிரகங்களும் அறியும்.ஆக அதீத சந்தோசம்,அதீத துன்பம் என்று இல்லாமல் எதையும் சாதாரணமாக எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்து கொண்டால் வெற்றி வசமாக வெகு தூரம் இல்லை.
இறைவனும் உங்களை விட்டு விலகாமல் உங்கள் பக்கமே இருப்பார்.அமைதியுடனும் நம்பிக்கையுடனும் இந்த புத்தாண்டை தொடங்குவோம்.நினைத்தது சாத்தியம் ஆகட்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |