இந்த ஒரு விஷயம் செய்தால் யாரும் உங்களை வீழ்த்தவே முடியாதாம்
மனிதர்களாகிய நாம் தினமும் ஒவ்வொரு தேடுதலுக்கு பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அதோடு, வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆக இன்று நாம் தெரிந்து கொள்ளக் கூடிய பாடம் நாளை புதிதாக வேறு ஒரு கண்ணோட்டத்தில் மாறுபடுகிறது. ஆதலால் மனிதர்கள் இங்கு நாம் வாழ்க்கை நமக்கு எந்த அளவிற்கு துன்பத்தை கொடுத்தாலும் அவர்களுடைய தன்னிலை மாறாது இருந்து போராடுவதே அவர்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும்.
அப்படியாக எல்லாருக்குமே அவர்கள் மிகவும் வலிமையாகவும், யாரும் அவர்களை வீழ்த்த முடியாத சக்தி வாய்ந்த ஒரு மனிதராக இந்த உலகத்தில் வலம் வர வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். இதற்கு நிச்சயமாக நாம் ஒரு மிகப்பெரிய பதவியோ அல்லது ஒரு ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் என்பது அல்ல.

இதற்கு நாம் நம்மை புரிந்துக் கொண்டு செயல்பட்டாலே போதும், நாம் தான் நமக்கு ராஜாவாக இந்த பூமியில் இருப்போம். அப்படியாக யாரும் வீழ்த்த முடியாத அளவிற்கு நீங்கள் உங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் உங்களுக்குள் அமைதியை நீங்கள் கொண்டு வர வேண்டும்.
மேலும் உங்கள் மனதில் இருக்கக்கூடிய நல்ல சிந்தனை வேறொருவர் மனதில் இல்லை என்று நீங்கள் ஆதங்கம் கொண்டு அந்த மனிதருடன் சண்டையிடுவதோ அல்லது வெறுப்பை கொட்டுவதும் உங்களுடைய ஆன்மாவை தான் பாதிக்கும்.
ஆதலால், உங்களுக்கு எதிரில் இருக்கக்கூடிய நபர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ள பழகுங்கள். இங்கு ஒவ்வொரு உடலுக்குப் பின்னால் ஒவ்வொரு ஆன்மா இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஆன்மா வழிநடத்தக்கூடிய பாதையில் ஒவ்வொரு மனிதர்களும் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
இங்கு அவர்களை நீங்கள் மாற்ற வேண்டுமென்றால் முதலில் நீங்கள் மாற வேண்டும். நீங்கள் கூச்சலிடுவதாலோ அல்லது சத்தம் போட்டு சண்டையிடுவதாலோ உங்களுக்கு எதிரில் இருக்கக்கூடிய நபர் என்றும் மாறப் போவது இல்லை.

நீங்கள் என்னவாக இந்த உலகம் மாற வேண்டும் உங்களுக்கு எதிரில் இருக்கக்கூடிய நபர் எவ்வாறாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த மனிதராக நீங்கள் வாழ பழகுங்கள். அப்பொழுது உங்களுடைய அந்த ஆற்றலானது எதிரில் இருக்கக்கூடிய நபரை அவர்களை அறியாமலே ஒரு நல்ல பண்புகள் கொண்ட மனிதர்களாக மாற்றி விடும்.
ஆக நம்முடைய மன அமைதியும் நம்மை சூழ்ந்து இருக்கக்கூடிய அந்த ஆற்றலும் தான் நமக்கு எதிரில் இருக்கக்கூடிய மனிதர்களை நமக்கு சாதகமாகவும் அல்லது எதிரியாகவும் மாற்றக்கூடிய நிலையில் இருக்கிறது.
எல்லா விஷயங்களையும் பக்குவமாக கையாள தெரியாவிட்டாலும் எல்லா விஷயங்களையும் மன அமைதியோடு நீங்கள் கையாள பழகிக் கொண்டாலே உங்களை வீழ்த்துவதற்கு இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் உங்களுடைய மௌனமே அவர்களுடைய தோல்வியாக இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |