வீட்டிற்குள் தெய்வீக சக்தி நுழைய வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயம் செய்யுங்கள்
ஒரு வீடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக தெய்வத்தினுடைய அருள் இருக்க வேண்டும். அந்த வகையில், வீட்டிற்குள் தெய்வீக சக்தி நுழைவது என்பது அவ்வளவு சாதாரணமல்ல.
மேலும், நம் வீடு கட்டுவதற்கு முன்பாக அந்த மண் மீது என்ன இருந்தது? அந்த மண் மீது யார் வாழ்ந்தார்கள்? மண்ணுக்கு அடியில் என்ன புதைந்து கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளக்கூடிய ஞானம் மனிதர்களுக்கு கட்டாயம் இல்லை.

ஆனால், அவை பறவைகளுக்கு உண்டு. குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அனில் இவைகளுக்கெல்லாம் தெய்வீக கலை ஆற்றலை உணரக்கூடிய சக்தி உண்டு. அதனால், இவ்வாறான பறவைகளை நம்முடைய வீட்டிற்கு கொண்டு வருவது அவசியம். இதற்கு நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டி தொங்க விடுகிறார்கள்.
அதை சாப்பிட குருவி வருகின்ற பொழுது மீண்டும் மீண்டும் வர துவங்குகிறது. அதை போல், அணில் கூடு கட்டிருப்பதை பார்க்கிறோம்.

இவை எல்லாம் நாம் அந்த தெய்வீக ஆற்றல் நம்முடைய வீட்டிற்கு வருவதற்கு நாம் செய்யக்கூடிய ஒரு மெனக்கிடல்கள் ஆகும் என்றாலும் அது அந்த பறவைகளுக்கான ஒரு உணவும் பாதுகாப்போம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு நீங்கள் எந்த ஒரு மெனக்கிடல் இல்லாமலே இந்த குருவிகள் அணில் போன்றவை உங்களுடைய வீடுகளில் குட்டி போடுவதும், குஞ்சு பொரிப்பதும் கூடு கட்டுவதுமாக இருந்தால் அதை கலைத்து விடாதீர்கள். வீடுகளில் அவை நல்ல நன்மையை கொடுக்கும். இவை விரட்டுவதால் நாமே நம் வீட்டுக்கு வரக்கூடிய தெய்வத்தை விரட்டுவதற்கு சமம்.