வாஸ்துபடி வீடு கட்டி இருக்கீங்களா? என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
ஜோதிடத்தில் வாஸ்து மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நாம் வீடுகளை கட்டும் பொழுது வாஸ்து பார்த்து கட்ட வேண்டிய அவசியமாக இருக்கிறது. அப்படியாக நம்முடைய வீடு வாஸ்து சாஸ்திரப்படி கட்டி இருக்கின்றோம் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய வீடுகளில் படுக்கை அறை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்த அறை தான் நமக்கு அமைதியையும் நல்ல உறக்கத்தையும் தரக்கூடியதாக உள்ளது. ஆதலால் வாஸ்து சாஸ்திரப்படி படுக்கையறை தென்மேற்கு திசையில் தான் அமைந்திருக்க வேண்டும். தென் கிழக்கு திசையில் அமைந்திருந்தால் தம்பதியினருக்குள் சண்டை சச்சரவுகள் உண்டாகும்.

அதே போல், வீடுகளில் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே மாடிப்படிகள் கட்டாயம் அமைத்தல் கூடாது. அவை நமக்கு வாஸ்து தோஷத்தை உண்டு செய்யும். நம்முடைய வீடுகளில் ஜன்னல் நமக்கு நல்ல வெளிச்சம் மற்றும் காற்று ஆகியவற்றை கொடுக்கிறது. ஆதலால் இந்த ஜன்னலை எப்பொழுதும் வீட்டை விட்டு வெளிப்புறமாக திறக்கும் படி தான் அமைந்திருக்க வேண்டும்.
அதேபோல் வீடுகளில் எப்பொழுதும் கிழக்கு மூலை காலியாக இருக்கும் படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் ஒரு பொழுதும் எடை அதிகமாக இருக்கக்கூடிய பொருட்களை வைக்கக்கூடாது.

குடும்பத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு பசியை ஆற்றக்கூடிய ஒரு அறையாக சமையலறை உள்ளது. ஆதலால் இந்த சமையலறை தென்கிழக்கு திசையில் அமைப்பது அவசியமாகும். தென் கிழக்கு திசை தான் வாஸ்துவில் அக்னி மூலை என்று அழைக்கிறார்கள்.
அதேபோல் வீட்டின் பிரதான கதவு ஒற்றை கதவாக இருந்தால் கண்டிப்பாக வலது புறமாக திறக்கும் படி அமைந்திருக்க வேண்டும் என்றும் வாஸ்து நிபுணர்கள் சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |