கர்ம வினைகள் குறைக்க சிவபெருமானின் சக்தி வாய்ந்த வழிபாடு
மனிதன் அவன் வாழும் காலங்களில் எதிர்பாராத துன்பம் இன்பம் சந்திக்க வேண்டியிருக்கும்.அந்த நிலையில் ஒரு சூழ்நிலையில் அவன்தெரிந்தும்,தெரியாமலும் கர்ம வினைகள் சேர்த்து விடுகின்றான்.அந்த கர்ம வினைகள் அவனுக்கு சில காலங்களில் பல கஷ்டத்தை கொடுத்து விடுகிறது.
நம்முடைய கர்மவினைகள் குறைய வேண்டும் என்றால் சில எளிய பரிகாரங்கள் செய்தால் போதும்.அந்த வகையில்,கர்மவினைகள் தீர்க்கும் கடவுளாக திகழ்பவர் சிவபெருமான்.பொதுவாக எவர் ஒருவர் சிவபெருமானை வழிபட தொடங்குறார்களோ,அவர்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை அவர் படிப்படியாக குறைத்து விடுவார்.
மேலும்,கர்மவினைகளை தீர்க்கும் வழிபாட்டை சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமை அன்று செய்வது தான் சிறந்த பலனை தரும்.அன்றைய தினம் காலையில் சுத்தமாக குளித்து விட்டு சிவாலயத்திற்கு செல்ல வேண்டும்.அவ்வாறு செல்லும் பொழுது சிவபெருமானுக்கே உரித்தான வில்வ இலைகளையும் ஒரு தேங்காயையும் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும்,வில்வ இலைகளை வாங்கும் பொழுது அதை ஒற்றை படையில் வாங்க வேண்டும்.அதாவது 21, 15, 51 என்ற எண்ணிக்கையில் எடுத்து செல்ல வேண்டும்.பிறகு அதை கொண்டு அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபாடு செய்யவேண்டும்.
முடிந்தால் சிவபெருமானின் மந்திரங்களை சொல்லி தியானம் செய்யுங்கள்.பிறகு பூஜை செய்த அந்த இரண்டு பொருட்களையும் வீட்டிற்கு கொண்டு வந்து பயன் படுத்தி கொள்ளலாம்.பிறகு வில்வ இலையை நம்முடைய வீட்டு பீரோவிலோ பணம் வைக்கும் இடத்தில் வைக்கும் பொழுது நம் வீட்டில் உள்ள செல்வம் வளம் அதிகரிக்கும்.சிவபெருமானின் அருளால் நமக்கு கர்மவினைகள் தீர்ந்து வாழ்க்கை வளமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |