2025 ஆம் ஆண்டு லட்சுமி தேவியின் முழு அருளை பெற போகும் ராசிகள் யார்?
மனிதன் வாழ்வில் சேர்ந்த செல்வங்களையும்,சேரும் செல்வங்களையும் பாதுகாக்க என்னதான் சுயசிந்தனை இருந்தாலும் கடவுளின் முழு ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே அவர்கள் அதை அனுபவித்து வாழமுடியும்.
அப்படியாக புது வருடம் 2025 பல ராசிகளுக்கு சாதகமாக அமைய போகிறது.காரணம் அவர்களுக்கு லட்சுமி தேவியின் முழு அருளும் கிடைக்க போகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு லட்சுமி தேவியின் அருளால் சிறப்பாக வாழ போகும் ராசிகள் யார் என்று பார்க்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறந்த ஆண்டாக அமைய போகிறது.இவர்களுக்கு லட்சுமி தேவியின் முழு அருள் கிடைக்க போகிறது.பல ஆண்டுகளாக நிதி நிலையில் துன்பப்பட்டவர்கள் இந்த ஆண்டு நல்ல நிலைக்கு வருவார்கள்.வியாபாரம் சிறப்பாக அமையும்.வசதிகளும் ஆடம்பரமும் அதிகரிக்கும்.அரசாங்க வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.கடனில் இருந்து விடுபட இது ஒரு அற்புதமான காலகட்டம்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் வசந்த காலம் ஆகும்.இந்த ஆண்டில் நிகழும் சனி பெயர்ச்சியால் ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கப்போகிறது.அதோடு அந்த இறைவனின் முழு அருளும் கிடைக்க போகிறது.இதனால் வியாபாரத்தில் நீண்ட நாள் தடைபட்ட பணம் கைக்கு வந்து சேரும்.திருமண வரன் சிறப்பாக அமையும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டில் லட்சுமி தேவியின் பரிபூரண அருள் கிடைக்க போகிறது.நீண்ட நாட்களாக கடனில் தவித்த தனுசு ராசிக்கு இனி வ்ரும் காலங்கள் சிறந்த காலமாக அமையும்.பிள்ளைகள் உங்களுக்கு முழு ஆதரவையும் தெரிவிப்பார்கள்.இந்த காலகட்டங்களில் பொன் பொருள் சேர்க்கை உருவாகும்.வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |