கர்ம வினைகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
மனிதனாக பிறந்த அனைவர்க்கும் எதோ ஒரு வைகையில் துன்பம் நேர்ந்து கொண்டு தான் இருக்கும்.மனிதனின் மனம் ஆனது இன்பத்தை காட்டிலும் துன்பத்தை அனுபவிக்கவே விருப்பம் கொள்ளும்.
இன்பமானது அவனின் வாழ்க்கையில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவது இல்லை.ஆனால் துன்பம் வந்து விட்டால் அவனை தீராது சிந்தனைக்குள் கொண்டு செல்லும்.
அவனை சிந்திக்க வைக்கும்.தான் மட்டுமே துன்பம் படுவது போல் நம்பச்சொல்லும்.அப்படி பட்ட எண்ணங்கள் அதாவது நான் என்ற தனி அறையில் தான் மனிதனும் உறவாடி கொள்ள விருப்பம் கொள்கிறான்.அபப்டி ஒரு சூழல் வரும் பொழுது அவனை எப்படி அந்த கவலையில் இருந்து மீட்டு எடுப்பது அதை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம்.
மனிதனுக்கு வரும் துன்பங்களில் காரணம் கர்மா வினைகளே.அதாவது முன் ஜென்ம பாவம் புண்ணிய கணக்கு எல்லாம் இந்த ஜென்மத்தில் அவர்களை அதை உணரவைத்து பாடம் கற்று கொடுக்கும்.
அதாவது சமயங்களில் சிலர் அவர்களையே அறியாமல் சொல்வதுண்டு அதாவது நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லையே இறைவா ஏன் இந்த சோதனை என்று சொல்லி புலம்புவதுண்டு.
அது தான் கர்ம வினையின் நோக்கம்.மனிதன் அவனே அவன் செய்த தவறை உணருவது. அபப்டியாக அந்த கரம் வினை நம்மை கொல்லாமல் கொன்று கொண்டு இருக்கும்.
உயிர் வாழ்தலே கடுமையின் உச்சம் என்றாகி விடும்.அப்பொழுது அவன் சாந்தமாக நிதானமாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு அவனுக்கு நடப்பவை அனைத்தும் காரணத்திற்கே என்று ஒப்புக்கொள்ளவேண்டும்.
எவன் ஒருவன் தனக்கு நடப்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள தொடங்குகிறானோ அன்று முதல் அவனின் கர்ம வினை படி படியாக குறைவதை காணமுடியும்.
ஆக எதற்கும் மனம் துவண்டு போகாமல் வருவதை ஏற்று கொண்டாலே போதும் வாழ்கை அழகாய் மாறிவிடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |