ஒருவர் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

By Sakthi Raj Mar 28, 2026 10:06 AM GMT
Report

 ஜோதிடத்தில் தோஷங்களில் மிகவும் முக்கியமான தோஷமாக பித்ரு தோஷம் இருக்கிறது. இந்த பித்ரு தோஷம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர்கள் வாழ்க்கையில் நிறைய தடைகளும் தாமதங்களும் சந்தித்து கொண்டு இருக்க வேண்டிய நிலையை உருவாக்குகிறது. அதாவது தங்களுடைய முன்னோர்களுக்கு இவர்கள் சரியான முறையில் பித்ரு காரியங்கள் செய்யாமல் இருப்பதால் இவர்களுக்கு பித்ரு தோஷம் உருவாகிறது.

அப்படியாக, ஒருவர் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது என்று பார்ப்போம். ஒருவர் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் ராகு கேது அல்லது சூரியன் சந்திரன், ராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு பித்ரு தோஷம் இருப்பதை அவை உணர்த்துகிறது.

ஒருவர் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது? | How To Find A Pithru Thosham In Horoscope

இஸ்லாமியர் கட்டிய ராமர் கோயில்.. அயோத்திக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு செல்லலாமாம்.

இஸ்லாமியர் கட்டிய ராமர் கோயில்.. அயோத்திக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு செல்லலாமாம்.

அதாவது தாய் வழி அல்லது தந்தை வழி வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு நாம் சரியான முறையில் பித்ரு காரியங்கள் செய்ய தவறியதால் ஏற்படக்கூடிய தோஷமாக இருக்கிறது அல்லது முற்பிறவியில் தாய் தந்தையை கவனிக்காமல் கைவிடுதல் உடன்பிறந்தவர்களை கொடுமைப்படுத்துதல் கரு சிதைவு செய்வது போன்றவை நமக்கு மிகப்பெரிய கடுமையான தோஷத்தை உருவாக்குகிறது.

ஜாதகருக்கு திருமணத்தில் தடை தாமதம் அல்லது திருமணம் நடக்காமல் போவது கூட பார்க்க முடிகிறது. ஒரு சிலருக்கு திருமணம் நடந்தாலும் விவாகரத்து ஏற்படக்கூடிய அமைப்பை கொடுக்கிறது. கணவன் மனைவி இடையே அன்பு இல்லாமல் போவது போன்றவை இந்த பித்ரு தோஷம் கொடுக்கிறது.

ஒருவர் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது? | How To Find A Pithru Thosham In Horoscope

வாஸ்து: வீடுகளில் இந்த பொருட்கள் இருந்தால் முதலில் அகற்றி விடுங்கள்

வாஸ்து: வீடுகளில் இந்த பொருட்கள் இருந்தால் முதலில் அகற்றி விடுங்கள்

ஒரு சிலருக்கு கலப்பு திருமணமும் பலமுறை திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பை இது பித்ரு தோஷம் கொடுக்கிறது. அதாவது நமக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வரங்களையும் கிடைக்க விடாமல் தடுக்கக்கூடிய அமைப்பை இது பித்ரு தோஷம் கொடுக்கிறது.

ஆகையால் இந்த புத்திர தோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசை நாட்களில் சரியான முறையில் திதி தர்ப்பணம் கொடுப்பதும் வயதானவர்களுக்கு உதவி செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடும் பொழுது இவர்களுக்கு பித்ரு தோஷத்தின் தாக்கம் குறைகிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US