உங்கள் கைகளில் ஒன்றுக்கும் மேல் திருமண ரேகை இருக்கிறதா? இதை தெரிந்துகொள்ளுங்கள்
ஜோதிடத்தில் பல வகைகள் இருக்கின்றது. அதில் ஒன்றுதான் கைரேகை ஜோதிடம். இந்த கைரேகை ஜோதிடம் ஆனது காலம் காலமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு ஜோதிடமாகும். இன்றளவும் பலரும் கை ரேகை ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்து பார்த்து வருவதை நாம் காணலாம்.
மேலும் எவ்வாறு ஜாதக கட்டம் வழியாக நம்முடைய வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியுமோ, அதை போல் கைரேகை ஜோதிடம் கொண்டும் நம்முடைய எதிர்காலத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.
அந்த வகையில் ஒருவருடைய வாழ்க்கையில் முக்கிய பங்காக வகிக்கக்கூடிய திருமணத்தை நாம் கைரேகை ஜோதிடம் வழியாக எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்ப்போம். ஒருவருடைய உள்ளங்கையில் உள்ள சுண்டு விரல்களுக்கு கீழே அமைந்திருக்கும் கோடுகள் தான் அவர்களுடைய திருமண வாழ்க்கையை குறிக்கக்கூடிய ரேகையாகும்.
சிலருக்கு இந்து திருமண ரேகையானது ஒன்றுக்கும் மேற்பட்ட ரேகையாக இருப்பதை நாம் காணலாம். அது அவர்களின் திருமண வாழ்க்கையை குறிக்கக்கூடிய முக்கியமான ரேகையாகும்.
அதாவது அவர்களுடைய திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும், அவர்கள் பிரிவை சந்திப்பார்களா இல்லை எவ்வளவு இணக்கமாக வாழ்வார்கள் என்பதை அந்த ரேகையானது நமக்கு தெளிவாக சொல்லக்கூடியது என்று சொல்கிறார்கள்.
ஒரு சிலருக்கு உள்ளங்கையில் உள்ள திருமண ரேகை பல பகுதிகளாக பிரிந்து இருக்கும். அவ்வாறு இருந்தால் அவர்கள் திருமண வாழ்க்கையில் சில கசப்பான அனுபவங்களை பெறலாம் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







