முருகா என்று கூப்பிட்டதால் பக்தருக்கு நடந்த அதிசயம் என்ன தெரியுமா?
இந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும் முருகப்பெருமானை தான் குறிப்பாக நாம் கலியுக வரதன் என்று போற்றி வழிபாடு செய்கின்றோம். காரணம் பக்தர்கள் அனைவரும் முருகா என்ற நாமத்தை உச்சரிக்க நொடிப்பொழுதில் வந்து அவர்களுடைய குறைகளை தீர்க்கக்கூடிய கண்கண்ட தெய்வமாக இருக்கிறார்.
அதோடு காலதாமதமே இல்லாமல் தங்களுடைய பக்தர்களின் குறைகளை போக்குவதற்கு முருகப்பெருமான் அவருடைய வாகனமான மயில் மீது ஏறி வந்து நிகழ்த்தக்கூடிய அதிசயங்களை நாம் வார்த்தைகளால் அவ்வளவு எளிதாக விவரித்து விட முடியாது.
அந்த நிகழ்வுகளை உணர்வுகளால் மட்டுமே நம்மால் புரிந்து கொள்ளக்கூடிய பக்தியின் உச்சகட்டமாக இருக்கிறது. மேலும் முருகப்பெருமானை மனதார சரணடைந்த எந்த ஒரு பக்தரும் அவரால் கைவிடப்படுவதில்லை.
அந்த வகையில் முருகா என்று அழைத்தால் முருகப்பெருமான் நிகழ்த்த கூடிய அதிசயங்களையும் முருகப்பெருமான் மறந்தாலும் அவருடைய வாகனமான மயில் பக்தர்களை பற்றி முருகப்பெருமானுக்கு எடுத்துச் சொல்லிக் கூடிய அந்த அற்புதமான தருணங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார் அவர்கள்.
அதைப்பற்றி நாம் இந்த காணொளியில் முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |