கடலில் குளித்தால் கண் திருஷ்டி விலகுமா?
மனிதனுக்கு கண் திருஷ்டி என்பது மிகவும் பாதிப்பு கொடுக்கக்கூடிய ஒன்றாகும். கண் திருஷ்டியானது ஒரு மனிதனின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்ற கூடிய சக்தி வாய்ந்தது. அதாவது அவர்கள் எதிர்பாராத இழப்புகளை கூட இந்த கண் திருஷ்டியானது கொடுத்துவிடும்.
அப்படியாக, கண் திருஷ்டியை கழிப்பதற்கு நாம் பல்வேறு பரிகாரங்கள் செய்தாலும் புனித தீர்த்தங்களில் நீராடுவது என்பது மிக சிறந்த பலன் கொடுக்கும்என்கிறார்கள். அதாவது கடலில் இருக்கும் உப்பு தன்மை நமக்கு உண்டான கண் திருஷ்டியை போக்க கூடிய சக்தி கொண்டது.
அதனால் தான் ஆதி காலங்களில் பெரியவர்கள் நாம் முக்கிய நாட்களில் கடல் சார்ந்து இருக்கும் இடங்களுக்கு சென்று புனித நீராடல் செய்ய வேண்டும் என்றார்கள். மேலும், நாம் திருஷ்டி என்றால் அதை எதிர்மறையாக மட்டும் தான் பார்க்கின்றோம்.
ஆனால், அவை நேர்மறை பார்வைகள் கொண்டும் இருக்கிறது. அதாவது குறிப்பிட்ட சில பெரியவர்கள், அல்லது குருக்கள் சிலரை பார்த்து மனதார தங்கள் வாழ்க்கையில் நல்ல உயரத்தை அடைவீர்கள் என்று வாழ்த்துவதுண்டு.
அவ்வாறு வாழ்த்தும் பொழுதும் அவர்களின் அந்த நேர்மறை பார்வையும் நம்முடைய வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் என்கிறார்கள். மேலும், கண் திருஷ்டியை பற்றிய பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |