இதை செய்தால் போதும்-நவகிரக தோஷம் நெருங்காது
இந்து மதத்தில் நவகிரகம் என்பது ஒருவர் வாழ்க்கையில் மிக பெரிய பங்கு வகிக்கிறது.அப்படியாக இந்த கிரக தோஷங்கள் நம்முடைய குணாதிசியங்கள் பொறுத்தே அமைகிறது.அதாவது நாம் கவனித்திருந்தால்,நம்முடைய தவறுகளை உணர்ந்து அதை மாற்றி கொள்ள முயற்சி செய்யும் பொழுதே நம் வாழ்க்கையில் உண்டான தடைகள் எல்லாம் படிப்படியாக குறைவதை பார்க்க முடியும்.
அப்படியாக இந்த பூமியில் பிறந்த மனிதர்கள் நல்வழியில் நடந்து,தர்ம சிந்தனை கொண்டு,மனதில் வஞ்சகம் இல்லாமல் வாழ எந்த நவகிரகத்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை.அப்படியாக நவகிரகத்தின் பாதிப்புகள் குறைய நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
1.ஒரு சிலர் அகங்காரம் கொண்டு வாழ்வார்கள்.அவர்களுடைய அகந்தை கர்வம் இவைகளை விட்டொழித்தால் அவர்களுக்கு உண்டான சூரிய தோஷம் நீங்கும்.
2.சிலருக்கு தண்ணீர் குடிப்பது என்றாலே எரிச்சல் ஊட்டும் செயல் போல் கருதுவார்கள்.ஆனால் நிறைய தண்ணீர் அருந்த சந்திரனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறையும்.
3.நாம் ஒருவருக்கு ரத்த தானம் செய்வது மிக சிறந்த பலனை கொடுக்கும்.அவ்வாறு ரத்த தானம் ரத்தசுத்தி பேணுதல் செவ்வாயால் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும்.
4.ஒரு சிலருக்கு வாழ்க்கையில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகும்.அவர்கள் அவ்வாறான நேரத்தில் கண்களை மூடி கொண்டு பிறமொழி கற்றுக்கொள்ளலாம்.அவ்வாறு பிறமொழி கற்க ராகுவால் வரும் சங்கடம் தீரும்.
5.வாழ்க்கையில் நமக்கு குரு என்பவர் மிக முக்கியமானவர்.அப்படியாக ஏதேனும் கலைகளை கற்றுதந்த நபர்களுக்கு இயன்ற உதவி செய்ய குருவால் ஏற்படும் கஷ்டங்கள் தீரும்.
6.சனி பகவானின் தாக்கம் குறைய ஊனமுற்றவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்யலாம்.அவ்வாறு செய்யும் பொழுது சனிபகவான் கெடுதல் தரமாட்டார்.
7.தோல்வியாதி கொண்டவர்களுக்கு உதவ புதனால் ஏற்படும் இன்னல்கள் மறையும்.
8.சமயங்களில் குழப்பங்கள் ஆழ்மனதை வருடி விடும்.அந்த நேரத்தில் பிற மதங்களில் என்ன போதனை செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் பொது கேதுபகவான் கெடுதல் செய்ய மாட்டார்.
9.உணவு என்பது நம்முடைய உடல் மனம் சம்பந்தப்பட்டது.அப்படியாக ஒருவர் உப்பு சர்க்கரை குறைத்து மெத்தை தலையனை தவிர்த்தால் சுக்கிரபாதிப்பு நீங்கும்.
ஆக நவகிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனை மேலும் வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் நம்முடைய கர்ம வினைகள் போக்கவும் செயல்படுகிறார்கள்.
அதாவது யாரும் சுட்டிக்காட்டாத,நாம் திருத்தி கொள்ளாத தீய பழக்கங்களை விட்டு விட நல்லறிவை போதிக்கவே நவகிரகங்கள் அவர்களின் வேலை செய்கிறார்கள்.ஆக மனிதர்கள் தாமே முன்வந்து தவறு எது?சரி எது?உணர்ந்து செயல்பட எல்லா நவகிரகங்களும் துணை நிற்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |