தலைக்கு மேல் உள்ள பிரச்சனைகளை சமாளிக்க கீதை சொல்லும் 8 வழிகள்
இந்த உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்றாலும் மனிதர்களுக்கு வருகின்ற துன்பத்தை எதிர்கொள்ள மிக பெரிய துணிச்சலும், தைரியமும் தேவை படுகிறது. பலரும் துன்பம் வரும் வேளையில் துவண்டு விடுகிறார்கள். தனக்கு மட்டுமே இவ்வளவு துன்பம் என்று அழுது புலம்பி விடுகிறார்கள்.
ஆனால், உலகத்தில் பிறந்த மனிதர்கள் எல்லோரும் இன்பம், துன்பம், துரோகம், வலி, இழப்புகள் என்று எல்லாம் சந்தித்தே இறக்க வேண்டும் என்பது நியதி. அதில் அழுது உடைந்து போவதால் எந்த ஒரு மாற்றமும் நடக்க போவது இல்லை.
ஆதலால் எதையும் எதிர்த்து போராடினால் அனைத்து பாக்கியங்களையும் பெறலாம் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அப்படியாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ஒரு மனிதன் எவ்வாறு அவனுக்கு வரும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்று சொல்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
1. மனிதனின் முதல் எதிரி அவனின் பயம். பயம் ஒரு மனிதனை வாழ விடாமல் கொன்று விடும். ஆக பிரச்சனைகள் வரும் பொழுது நாம் ஓடி ஒளிவதை காட்டிலும் அந்த பிரச்சனைக்கு எதிரில் நின்று போராடுவது நம்மை பலம் மிக்க மனிதனாக மற்றும் என்கிறார் கிருஷ்ணர்.
2. அதே போல் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களின் கடமையை செய்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதை மீறினால் மனம் நிதானம் இழக்கும். குற்ற உணர்ச்சி உண்டாகும். அதுவே நம் தோல்விக்கு வழி வகுக்கும். ஆக, கடமையை செய்துவிட்டால் பாதி துன்பத்தை கடந்து விடலாம்.
3.பகவான் படைத்த அனைத்து உயிரினங்களும் அவர்களுக்க என்று தனி தன்மை பெற்று தான் பூமியில் பிறந்து இருக்கிறது. அதை நாம் குறைத்து மதிப்பிடுவது பகவானுக்கு செய்யும் துரோகம் ஆகும். எவ்வளவு பெரிய துன்பம் என்றாலும், துன்பம் கொடுத்த இறைவனால் நல்ல முடிவு பிறக்கும் என்றும் கட்டாயம் அது நமக்கு சாதகமாக அமையும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
4. வாழ்க்கையில் நாம் நினைத்தது எல்லாம் நடப்பது இல்லை. நமக்கும் மேல் ஒரு இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்த்தும் வகையில் சில விஷயங்கள் நாம் கணிதத்திற்கு மீறி போவதுண்டு. அப்படியாக, பதில் நமக்கு சாதகமாக இருக்கிறதா என்று எதிர் பார்க்காமல், கடமையை செய்திட பகவான் பார்த்து கொள்வான் என்று விட்டு விட வேண்டும்.
5.வாழ்க்கையில் இது தான் நிரந்தம் என்று எதுவும் இல்லை. எல்லாம் மாற கூடியது மறையக்கூடியது. ஆக எதன் மீதும் அதீத பற்று இல்லாமல் இருப்பது நன்மை தரும்.
6.நடப்பவை, நம்மை சுற்றி இருப்பவை எல்லாம் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. ஆனால் நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றோம். ஆதலால் மற்றவர்களை கட்டுப்படுத்துவதை காட்டிலும் நாம் நம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது அவசியம்.
7. பிரச்சனைகளைப் பற்றி அதிகமாக யோசித்தால், அவை மோசமாகிவிடும். பயத்தில் உட்கார்ந்திருப்பதை விட, ஏதாவது செய்யுங்கள். சிறிய அடிகள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
8. நாம் எப்பொழுதும் ஒரு உயர்ந்த சக்தியின் மீது அதீத நம்பிக்கையை வைக்க வேண்டும். நம்பிக்கை நம்மை முழுமையாக உயர்த்தும். கடவுள் கொடுக்கும் ஓவ்வொரு இக்கட்டான நிலையும், நம்மை பக்குவப்படுத்தவும் இலக்கை நோக்கி ஓடவும் என்றே உறுதியாக நம்ப வேண்டும்.
ஆக, வாழ்க்கை வாழ்வதற்கே தவிர்த்து கடந்து செல்லும் விஷயங்களை நினைத்து வருந்துவதற்கு அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சரண் அடைந்து வேண்டுதல் வைக்க எல்லாம் சாத்தியம் ஆகும். அதோடு நினைத்த வாழ்க்கை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |