பொதுவாக மனிதர்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று நமக்கு சாணக்கியர் பல விஷயங்களை தீர்க்கமாக ஆராய்ந்து அனுபவித்து சொல்லியிருக்கிறார். அந்த வகையில் மனிதன் பேசவேக்கூடாத ஒரு விஷயங்களில் பொய் ஒன்று.
பொய் சொல்பவன், வாழ்க்கையை பதட்டத்துடனே வாழவேண்டும். அப்படியாக, ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை எவ்வாறு கண்டுப்பிடிப்பது என்று சாணக்கிய நீதியில் சொல்லப்பட்டுயிருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. பொய் சொல்பவர்கள் உடல் நிலை ஓரு தன்மையில் இருக்காது. அவர்களின் புருவங்களும் உடலும் ஏதேனும் அசைவை கொடுத்து கொண்டே இருக்கும். அவர்களால் நேராக ஒருவர் கண்களை பார்த்து பேச முடியாது.
2. அதே போல் பொய் சொல்பவர்கள் ஒரு விஷயத்தை மிகவும் குழப்பிக்கொள்வார்கள். அவர்களால் தெளிவாக பேச முடியாது.
3. பொய் சொல்பவர்கள் எப்பொழுதும் சத்தியம் செய்கின்றேன் என்று வார்த்தைகளை பயன் படுத்துவார்கள். அவர்கள் தாங்கள் எப்பொழுதும் நேர்மையான மனிதர் என்பதை காட்டிக்கொள்ள விரும்புவார்கள்.
4. பொய் சொல்பவர்கள் எப்பொழுதும் ஒரு மனிதனுக்கு துரோகியாகவே இருப்பார்கள். அவர்களை நம்பாமல் இருப்பதே சிறப்பு.
5. சில நேரங்களில் பொய் சொல்பவர்கள் அவர்களை நம்ப செய்ய கடின உழைப்புகளை போடுவார்கள். உண்மை எப்பொழுதும் நிதானமாக பேசும். அவை யாரிடமும் மண்டியிட விரும்புவதில்லை. ஆனால், பொய் சொல்பவர்கள் தன்னை நிரூபிக்க பல யுக்திகளை கையாள்வார்கள்.
ஆக, மனிதன் செய்யும் தவறுகளில் மன்னிக்க முடியாத காரியங்களில் பொய் சொல்வது முக்கிய பங்கு வகிக்கிறது. பொய் சொல்பவர்களை நம்பி நாம் எந்த ஒரு விஷயங்களிலும் ஈடுபாடு செலுத்த முடியாது, அவை தோல்வியில் தான் முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |