வீட்டில் தெய்விக சக்தியை அதிகரிக்க செய்யவேண்டிய முக்கியமான விஷயங்கள்
மனிதன் நினைத்து சாதிக்க முடியாத விஷயத்தை தெய்வத்தின் துணை கொண்டு நம்மால் அதில் வெற்றி அடைய முடியும்.இறைவன் வழிபடுவதால் நம்முடைய மனமும் வாழ்க்கையும் தூய்மை அடையும்.அந்த வகையில் நம்முடைய வீட்டில் தெய்விக ஆற்றல் அதிகரிக்க செய்யவேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
பொதுவாக வீடுகளில் நிச்சயம் வாரத்தில் ஒரு நாள் ஆவது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றாக இருந்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவேண்டும்.அப்பொழுது ஒரு வித நேர்மறை ஆற்றல் பெருகும்.அது நம்முடைய குடும்பத்தில் இருக்கும் அனைவருடைய வளர்ச்சிக்கும் உதவியாக அமையும்.
அதே போல் வருடத்தில் ஒரு முறை குடும்பமாக குலதெய்வம் செல்ல வேண்டும்.அதோடு 6 மாதம் ஒரு முறை ஆவது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அவர்களின் வேலைகளை கொஞ்சம் தள்ளி வைத்து உங்களுக்கு பிடித்த ஆலயம் சென்று வழிபாடு செய்வது மிக சிறப்பாக அமையும்.
காலம் போகும் வேகத்தில் பலருக்கும் இறைவனுக்காக கொஞ்சம் நேரம் செலவழித்து மந்திரங்கள் சொல்லி வழிபட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.ஆனால் உங்கள் வீடுகளில் நேரம் கிடைக்கும் பொழுது நீங்கள் கடவுள் பாடல்கள் ஒலிக்க செய்யுங்கள்.
அது உங்கள் காதுகளில் விழுவதும்,வீட்டில் ஒலிப்பதும் சிறந்த பலனை கொடுக்கும்.இவ்வாறு திருவாசகம்,திருமந்திரம்,கந்த சஷ்டி கவசம்,போன்றவற்றை ஒலிக்க செய்யும் பொழுது கேட்கும் பொழுதும் நமக்கு உண்டான தோஷங்கள் படிப்படியாக குறையும்.
ஏன் நாம் தெய்விக மந்திரங்கள் சொல்லுவதால் எந்த ஒரு பரிகாரம் செய்யாமலும் நம்முடைய தோஷங்கள் நம்மை விட்டு விலகுவதை பார்க்க முடியும்.அதோடு வாரம் ஒரு முறை வீட்டில் காட்டாயம் சாம்பிராணி தூபம் போடுங்கள்.
மறக்காமல் இரவு வேளையில் திருஷ்டி கழித்து சூடத்தை வீட்டு வாசலில் ஏறிய விடுங்கள்.இவ்வாறு நாம் தொடர்ந்து செய்யும் பொழுது நமக்கு வரும் துன்பத்தை தடுக்க முடியவில்லை என்றாலும் அதனின் தாக்கத்தை குறைக்க முடியும்.
அதே போல் வீட்டில் ஈரமான துணிகள் இருந்தால் அதை உடனடியாக காய போடுங்கள்.அது ஒரே இடத்தில் இருப்பது எதிர்மறை ஆற்றல் உருவாகும்.வெளியில் செல்லும் பொழுது இறைவன் நாமத்தை மனதில் சொல்லிக்கொண்டே செல்லுங்கள்.போகும் வேலை வெற்றிகரமாக அமைவதோடு உங்கள் மனதில் பதட்டம் இல்லாமல் காணப்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |