உங்கள் வீடுகளில் கெட்ட சக்தி இருப்பதை எப்படி தெரிந்துக் கொள்வது?

By Sakthi Raj Aug 16, 2026 04:40 AM GMT
Report

நம் வீடு எப்பொழுதும் சுத்தமாகவும் நல்ல அதிர்வலைகள் கொண்டும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும அமைதியான சூழ்நிலை உருவாகும். ஒரு வேளை நேரம் சரி இல்லாத காரணத்தால் வீடுகளில் கெட்ட அதிர்வலைகள் அல்லது பிறரின் தீய எண்ணத்தால் கண் திருஷ்டி செய்வினைகள் போன்றவை நம் வீடுகளை சூழந்து இருந்தால் அதை எப்படி அறிந்துக் கொள்வது எப்படி பார்ப்போம்.

நம்முடைய வீடுகளில் நல்ல அதிர்வலைகள் உள்ளதா என்று கண்டு அறிய வலைப் பையில் (mesh net) எலுமிச்சை பழத்தை வைத்து உங்கள் பூஜை அறையில் அல்லது வீடுகளில் வீட்டில் மற்ற பகுதிகளில் பிடித்துப் பார்க்க வேண்டும்.

அந்த எலுமிச்சை பழம் வலதுபுறம் (கடிகார திசையில்) சுற்றினால் வீடுதிகளில் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல அதிர்வலைகள் சூழ்ந்து உள்ளது. அதுவே இடதுபுறம் (எதிர் கடிகார திசையில்) சுற்றினால் வீடுகளில் சில எதிர்மறை ஆற்றல் பாதித்து இருப்பதை காட்டிக் கொடுக்கிறது.

இறந்தவர் வீட்டிற்கு செல்வது 1000 கோவில்களுக்கு செல்வது சமம்.. காரணம் என்ன?

இறந்தவர் வீட்டிற்கு செல்வது 1000 கோவில்களுக்கு செல்வது சமம்.. காரணம் என்ன?

அதேபோல், நாம் வெளியூர் பயணம் செல்லும் பொழுது வீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும் ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டின் வரவேற்பு அறையில் ஒரு மேஜையில் வைத்து அம்பாளிடம் நன்றாக வேண்டிக்கொண்டு நல்லபடியாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்துக்கொண்டு செல்ல நிச்சயம் அம்பாளின் அருளால் வீடுகளில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றல் பாதிக்காமல் பாதுகாக்கும்.

மேலும், வீடுகளில் நேர்மறை ஆற்றல் சூழ்ந்து இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்துக் கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US