பணக்கஷ்டம் என்பது ஒரு சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை.
ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் சிலர் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.
அந்தவகையில், வீட்டில் செல்வம் பெருக, மகாலக்ஷ்மியின் அருளை பெற வெள்ளிக்கிழமையில் இப்படி விளக்கேற்றுங்கள்.
எப்படி விளக்கேற்றுவது?
முதலில் ஐந்து வெற்றிலைகளை எடுத்து அதில் சந்தனம் பூசி, மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும்.
பின்னர் வெற்றிலைகளை வட்டமாக அடுக்கி, அதன் மேல் ஒரு மண் அகல் விளக்கை வைக்க வேண்டும்.
மண் அகல் விளக்கையும் குங்குமம், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
அந்த மண் அகல் விளக்கில் கல் உப்பைப் போட்டு, அதிலும் மஞ்சள், குங்குமம் சேர்க்க வேண்டும்.
பின்னர் மற்றொரு அகல் விளக்கை எடுத்து அதில் பசு நெய்யை ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்து, உப்பு போட்ட விளக்கின் மேல் வைத்து ஏற்ற வேண்டும்.
இதற்கடுத்து இந்த விளக்கைச் சுற்றி பூக்களை வைத்து அலங்கரித்து விளக்கிற்கு தீபாராதனை காட்டி, அட்சதையும் தூவி வணங்க வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளை பெற்று வீட்டில் செல்லம் பெருகி மகிழ்ச்சியாக வாழலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |