நிம்மதியான வாழ்க்கையை வாழ்வது எப்படி?
மனிதன் நமக்கு மட்டும் தான் ஆயிரம் பிரச்சனைகள்.பிறக்கும் பொழுது யாரும் எதையும் சுமந்து வரவில்லை.அப்படியாக பிரச்சனைகளில் பாதி நாமே நமக்கு உருவாக்கியது தான்.மீதி உருவாகும் பிரச்சனை பிறரிடம் நம்மை ஒப்பிட்டு "நீயா நானா "என்று உருவாகுவது.
நாம் வாழும் காலத்தில் என்றாவது யோசித்து பார்த்தது உண்டா?ஐந்து அறிவு ஜீவன்கள் அவர்களை பிற ஜீவ ரசிகளிடம் ஒப்பிட்டு மன சங்கடத்திற்குள் ஆளாகுமா என்று?ஆனால் மனிதன் நாம் தான் அறிந்தவன் அறியாதவன் என்று எல்லோரிடமும் நம்மை ஒப்பிட்டு மனம் தாழ்த்தி வாழ்கின்றோம்.
உதாரணமாக எறும்பை எடுத்து கொள்வோம்.மிகவும் சிறிய வடிவிலான எறும்பு என்றுமே அண்ணார்ந்து வண்ண நிறத்தில் சிறகடிக்கும் பட்டாம் பூச்சியை பார்த்து அதை போல் வாழ ஆசை பட வில்லை.விலங்குகளில் ஒன்றை விட ஒன்று பலசாலியாக இருக்கும்.
அந்த வகையில் நாய் ஒரு போதும் சிங்கத்தை பார்த்து பொறாமை கொண்டது இல்லை.கரகரப்பான குரல் கொண்ட காகம் ஒருநாளும் குயிலின் ஓசையை கண்டு ஏக்கம் அடைந்தது இல்லை. அவ்வளவு ஏன் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைங்களே ஒன்றை போல் ஒன்று இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உருவம்,விதி வாழ்க்கை.இவ்வாறாக விலங்குகள் அவர்களுடைய கடமையை செய்து வாழ்ந்து வருகிறது.ஆனால் மனிதன் தான் எல்லை அற்று சிந்திக்கின்றான்.ஏன் என்றால் அது தான் அவனின் தனித்துவம்.
அவன் விலங்கு போல் இல்லை.மனிதனுக்கு சிந்தித்து செயல் படும் பெரிய ஆற்றல் கொடுத்து இருக்கின்றான் இறைவன்.ஆனால் மனிதன் பல நேரங்களில் அதை ஒரு போதும் பயன் படுத்துவதில்லை. இறைவன் படைத்த படைப்புகளில் மனிதன் அல்லது விலங்கு யாராக இருப்பினும் அவர் அவர் வாழ்க்கையை அவர் அவர் வாழ்ந்து அவர் அவர் பசியை தூக்கத்தை அவர் அவர் தான் போக்கி கொள்ள முடியும்.
ஒருவருக்கு உருவாகும் வலியோ வேதனையோ மரணத்தையே இன்னொருவர் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆக பூமியில் பிறந்த எல்லா உயிர்களும் தனித்தன்மை வாய்ந்தது.அவை 5 அறிவு உயிர்களுக்கு புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்றாலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.மனிதன் நாம் தான் இன்னும் பல கேள்விகளுடன் குழப்பங்களுடன் நம்மை தாழ்த்தி கொண்டு இருக்கின்றோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |