அகல் விளக்கு தவறி உடைந்தால் ஆபத்து ஏற்படுமா?
கார்த்திகை மாதம் எல்லோர் வீட்டிலும் தினமும் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது உண்டு.பொதுவாக பூஜைக்குரிய பொருட்களை நாம் பத்திரமாகத்தான் கை ஆளுவோம்.இருந்தாலும் சமயங்களில் நம்மை மீறி அந்த பொருள் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அப்படியாக நம்முடைய வீடுகளில் எந்த பொருள் கைதவறி விழுந்தாலும் வீட்டின் பெரியவர்கள் கவனமாக இருங்கள் என்று சொல்லுவார்கள்.ஆனால் பூஜை பொருள் தவறி விழும் பொழுது பெரியவர்கள் மனம் சஞ்சலம் அடையும்.
அதிலும் பூஜை அறையில் மிக முக்கிய பொருளாக கருதப்படும் விளக்கு சாமான்கள் கீழே விழுந்தால் ஒரு வித பயமும் பதட்டமும் உண்டாகும்.நாம் இப்பொழுது வீட்டில் தவறி அகல் விளக்கு உடைந்து விட்டால் என்ன செய்வது என்று பார்ப்போம்.
நாம் தெய்வமாக போற்றி வணங்க கூடிய விளக்கானது தவறி விழும் பொழுது நாம் அச்சம் கொள்ள வேண்டாம்.அவை நம்மை கண் விழித்து பார்க்க சொல்லும் ஓர் அறிகுறி தான்.அதாவது அவை நிதி நெருக்கடிகள் குடும்பத்தில் சண்டை போன்ற விஷயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று நமக்கு ஒரு அறிவிப்பு கொடுக்கவும் இவ்வாறான சம்பவங்கள் வீட்டில் நிகழ்வதுண்டு.
ஆக நாம் வீட்டில் பொறுமையை கடைபிடித்து எல்லா வேலைகளையும் நிதானமாக செய்ய பின்னாளில் வரும் பிரச்னையை முறையாக கையாளலாம்.மேலும் அந்த சமயத்தில் மனம் பதட்டம் அடையும் அப்பொழுது நிதானமாக அமர்ந்து தண்ணீர் அருந்துவது சிறந்த பலனை தரும்.
பொருள் தவறி விழுந்த வேகத்தில் பலரும் கோபமும் பதட்டமும் அடைவார்கள்.அதுனால் வீட்டில் நடக்க இருக்கும் பிரச்சனை அதிகம் ஆகுமே தவிர சமாதானம் அடையாது. ஆதலால் யார் பொருளை தவற விட்டாலும் உடன் இருப்பவர்களும் பொருளை தவற விட்டவர்களுக்கு வீட்டில் விழிப்புணர்வாக இருப்பது அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |