பகவத் கீதை தத்துவங்கள்: இனிமையாக பேசும் எல்லோரும் நன்மை செய்வார்களா?
இந்த உலகத்தில் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய சங்கடமான நிலை யாரை நம்புவது? எப்படி நம்புவது? எப்பொழுது நம்புவது? இந்த தடுமாற்றம் தான் அவர்களுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
இந்த ஒரு நுணுக்கமான விஷயத்தை நாம் அறிந்து விட்டால் பல பிரச்சனைகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். முக்கியமாக நம்முடைய மனமானது உடைந்து போகாமல் நாம் பார்த்துக் கொள்ள முடியும்.
அப்படியாக, கிருஷ்ண பகவான் அருளிய பகவத் கீதையில் நாம் இந்த உலகத்தைப் பற்றிய தெரிந்து கொள்ளக்கூடிய எல்லா விஷயங்களும் நிறைந்து இருக்கிறது.

பகவத் கீதை ஒன்று மட்டுமே போதும் நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாகவும் அமைதியானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்வதற்கும். அப்படியாக, கிருஷ்ண பகவான் நமக்கு இனிமையாக பேசக்கூடிய எல்லோரும் நமக்கு நன்மை செய்வார்களா? என்பதை பற்றி எடுத்து சொல்கிறார். அதை நாம் தெரிந்து கொள்வோம்.
ஒருமுறை அர்ஜுனன் கிருஷ்ண பகவானிடம் கேட்கிறார், கிருஷ்ணா! இனிமையாக பேசும் எல்லோரும் நமக்கு நன்மை செய்யக்கூடியவர்களா என்று? சந்தேகத்தை கேட்கிறார். அதற்கு கிருஷ்ணன் அழகாக பதில் அளிக்கிறார். இந்த ஒரு பதில் நம் மனதில் பதிந்து விட்டால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் இனி துன்பம் என்பது இல்லை.
கிருஷ்ணர் சொல்கிறார்! இங்கு யார் வேண்டுமானாலும் இனிமையாக பேசலாம். ஆனால், இனிமையாக பேசும் எல்லோரையும் நம்பி விடாதே. அவர்களுடைய செயல்களை கவனித்துப் பார். துரியோதனன் இனிமையாக பேசினான். ஆனால், அவனுடைய மனதில் பாண்டவர்களை பற்றிய பொறாமை சூழ்ந்து இருந்தது.

ஆக, ஒருவருடைய சொல்லை விடவும் அவர்களுடைய எண்ணமே அவர்கள் யார் என்பதை நமக்கு உணர்த்தக் கூடியது. கர்ணன் துரியோதனன் நட்புக்கு நன்றியுடன் இருந்தான். ஆனால், அது அவனை தர்மத்தை விட்டு வழிதவறி நடக்கச் செய்தது. ஆகையால், அர்ஜுனா அன்பாக பேசுபவர் எல்லோரிடமும் மதிப்பளி.
ஆனால், அவர்களுடைய செயல்களை பார்த்து அவர்களுக்கு நம்பிக்கை கொடு என்று கிருஷ்ணர் சொல்கிறார். மேலும், கிருஷ்ணர் நமக்கு இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை உணர்த்துகிறார்.
இனிமையான வார்த்தைகள் நம்முடைய மனதை அந்த நேரத்தில் மகிழ்விக்கும்.உண்மை யான செயல்களே அவர்களுடைய அன்பை நிரூபிக்கும்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |