மகாபாரதம்: கிருஷ்ணர் மௌனம் காத்த 3 தருணங்கள்.. உணர்த்தும் உண்மை என்ன?

By Sakthi Raj Sep 06, 2026 12:15 PM GMT
Report

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் ஒரு மனிதன் எவ்வாறு அவருடைய கடமையை செய்ய வேண்டும்? கர்மா என்றால் என்ன? உண்மை ஆகியவற்றை பற்றிய ஞானத்தை உலகிற்கு அருளியவர்.

அந்த வகையில், மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் எதுவும் பேசாமல் இருந்த தருணங்கள் இருக்கிறது. அந்த மௌனத்திற்கு பின்னால் பல காரணங்களும் பல ஞானமும் நமக்கான வாழ்க்கை பாடமும் ஒளிந்திருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

தர்மம் எங்கெல்லாம் தோற்கிறதோ அங்கெல்லாம் கிருஷ்ண பகவான் வருவார் என்று நமக்கு தெரியும். ஆனால், அநீதி நடந்து போதும், துயரம் சூழ்ந்த போதும் கூட, சந்தேகங்கள் நீடித்த போதும் கூட கிருஷ்ண பகவான் ஏன் சில நேரங்களில் மௌனமாக இருந்தார்?

அது அவருடைய அலட்சியத்தால் ஏற்பட்ட மௌனமா? அல்லது அந்த மௌனத்திற்குள் ஒளிந்திருக்க கூடிய ஆழமான பாடம் என்ன ? கிருஷ்ண பகவான் அவர் காத்த மௌனம் எப்பொழுதும் பலவீனத்தின் அடையாளம் அல்ல. சில நேரங்களில் அதுவே நம்முடைய ஞானத்தின் உச்சநிலையாகும்.

மகாபாரதம்: கிருஷ்ணர் மௌனம் காத்த 3 தருணங்கள்.. உணர்த்தும் உண்மை என்ன? | Krishnas Silent Lessons From Mahabharatam

பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்

பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்

திரௌபதியின் கேள்வி சபையில் எழுந்தபோது:

அரசர்கள் நிறைந்த சபையில் திரௌபதியை அவமானப்படுத்தப்பட்ட போது அங்கு வார்த்தைகளை விட மௌனமே அதிகமாக எதிரொலித்தது. அபொழுதுது திரௌபதி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார். தன்னை தானே முதலில் இழந்த யுதிஷ்டிரன், அதன் பிறகு எவ்வாறு என்னை பணயம் வைக்க முடியும். அப்பொழுது கிருஷ்ணன் பகவான் உடனடியாக அந்த சபைக்குள் வந்து தர்மம் குறித்து எதுவும் பேசவில்லை.

மாறாக, அந்த சபையில் இருந்தவர்களின் உண்மையான முகத்தை அவர்கள் காத்த மௌனம் வழியாக இந்த உலகத்திற்கு வெளிப்படுத்த அனுமதித்தார். இறுதியாக, திரௌபதியின் மானத்தை காப்பாற்ற தெய்வீகமாக அவர் தலையிடுகிறார்.

ஆனால் கிருஷ்ண பகவான் அவருடைய கரங்களை நீட்டுவதற்கு முன்பாக அந்த சபையில் நீண்ட அந்த மௌனம் தர்ம வீழ்ச்சிதை வெளிப்படுத்தியது. ஆனால், பல நேரங்களில் உண்மையை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காகவே மௌனம் அந்த நேரங்களிலும் தேவைப்படுகிறது. அதையே கிருஷ்ணர் நமக்கு உணர்த்துகிறார்.

காந்தாரியின் சாபம்:

காந்தாரி தன்னுடைய மகன்களை இழந்த துயரத்தில் உடைந்து போன பொழுது கிருஷ்ணருக்கே சாபமிட்டாள். அதாவது யாதவ குலமும் ஒரு நாள் அழிந்து போகும் என்று அவள் சாபமிட்டபொழுது கிருஷ்ண பகவான் அவளுடன் வாதம் செய்யவில்லை. அவர் தன்னை தற்காத்துக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அவர் அமைதியாக அந்த சாபத்தை ஏற்றுக் கொண்டார். அமைதி காத்ததால் அது தோல்வியின் மௌனம் என்று நாம் சொல்லிவிட முடியாது. விதி மற்றும் கர்மத்தின் தவிர்க்க முடியாத விதிகளை அவர் அதை ஏற்றுக்கொண்ட ஞானத்தின் மௌனமாக அது விளங்குகிறது. இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காலத்தின் உடைய நடவடிக்கைகளையும், கர்ம விளைவுகளையும் அந்த தெய்வீக சக்தியும் மதிக்கிறது என்பதை கிருஷ்ண பகவான் அவருடைய அமைதியின் வழியாக நமக்கு உணர்த்துகிறார்.

யாதவர்களின் வீழ்ச்சி:

மகாபாரதம் போர் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு யாதவ குலத்தில் பிறந்தவர்கள் அவர்களுக்கு உள்ளேயே மோதல் செய்து இறுதியில் அழிவிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு உச்சத்தை தொட்டது. அந்த காலகட்டங்களில் முடிவு நெருங்கி விட்டது என்று கிருஷ்ணர் நன்கு அறிந்திருந்தார். ஆனால், அவர் அந்த அழிவை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

காந்தாரி கொடுத்த சாபம் அதன் விளைவுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததை கிருஷ்ண பகவான் அறிந்திருந்தார். ஆதலால், அவர் விதியின் போக்கில் தலையிடாமல் அமைதியாக ஏற்றுக் கொண்டார். சில நேரங்களில் நாம் ஒரு சில நிகழ்வுகளை தடுப்பதாலயே அதனுடைய முடிவை நாம் முற்றிலும் மாற்றி விட முடியாது.

அந்த முடிவை சிறிது காலம் தாமதப்படுத்தலாம் அவ்வளவு தான். ஆக, ஒருவர் செய்கின்ற அங்காரம் மற்றும் தீராத ஆசை, கட்டுப்பாடற்ற செயல்கள் ஆகியவற்றின் விளைவுகளில் இருந்து அவர்கள் எந்த காலமும் தப்பிக்க முடியாது என்பதை யாதவர்களை அழிவு இந்த இடத்தில் நமக்கு உணர்த்துகிறது.

மகாபாரதம்: கிருஷ்ணர் மௌனம் காத்த 3 தருணங்கள்.. உணர்த்தும் உண்மை என்ன? | Krishnas Silent Lessons From Mahabharatam

அன்பிற்கும் அடிமைத்தனத்திற்கும் என்ன வித்தியாசம்? தெளிவை கொடுக்கிறார் கிருஷ்ண பகவான்

அன்பிற்கும் அடிமைத்தனத்திற்கும் என்ன வித்தியாசம்? தெளிவை கொடுக்கிறார் கிருஷ்ண பகவான்

 

வேடன் ஜராவின் அம்பு:

கிருஷ்ண பகவான் அவருடைய பூலோக வாழ்க்கையில் இறுதி கட்டத்தில் இருந்த பொழுது வேடன் ஜரா தவறுதலாக எய்த அம்பு கிருஷ்ண பகவான் பாதத்தில் பாய்ந்தது. அந்த நேரத்தில் கிருஷ்ணர் எந்த கோபமும் கொள்ளவில்லை. அதற்கு பதிலடி கொடுக்கவும் இல்லை. கிருஷ்ண பகவான் பாதத்தின் மீது எய்த அம்பினால் வேடன் அச்சமடைந்தார்.

ஆனால், கிருஷ்ண பகவான் அவரை அமைதி படுத்தினார். துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் தொடக்கமும் நெருங்கி இருந்த அந்த வேளையில் கிருஷ்ணர் அவருடைய முடிவை அமைதியாக ஏற்றுக் கொள்கிறார். இதுதான் பற்றின்மையின் உச்ச நிலை.

கிருஷ்ணரின் மௌனம் சொல்லும் உண்மை:

கிருஷ்ண பகவானுடைய வாழ்க்கை நமக்கு ஒரு தெய்வீக உபதேசங்களால் நிறைந்தவை. அவர் எவ்வாறு நிறைய விஷயங்கள் பேசினாரோ அதற்கு இணையாக பேசாமல் இருந்த தருணங்களிலும் பல ஆழமான பாடங்கள் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது.

கிருஷ்ண பகவான் அநீதி நடக்கும் போதும், துயரத்தில் தவித்த பொழுதும், கர்மத்தின் சுழற்சி சூழ்ந்த பொழுதும், விதி முன் நின்று தாக்கிய பொழுதும், மரணத்தின் அருகில் இருந்த பொழுதும் கிருஷ்ண பகவான் சில நேரங்களில் அமைதியாகவே இருந்தார். அந்த மௌனம் பலவீனம் அல்ல. அது நமக்கு சொல்லக்கூடிய விழிப்புணர்வு.

கிருஷ்ண பகவான் நமக்கு சொல்லக்கூடிய ஒரு பெரிய உண்மை எல்லா கேள்விகளுக்கும் நாம் எல்லாம் நேரங்களிலும் வார்த்தைகளால் பதில் சொல்லி விடவே முடியாது. சில நேரங்களில் அதற்கு மௌனம் தான் சிறந்த பதிலாக இருக்கிறது.

சில நேரங்களில் நாம் சில விஷயங்களில் தலையிடாமல் இருப்பதாலே கர்மத்தின் உண்மை வெளிப்படும். வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதற்கு சில நேரங்களில் வருவதை எதிர்க்காமல் அவ்வாறே ஏற்றுக் கொள்வது சிறந்தது. அதுவே பற்றின்மையும் உச்ச நிலை. அதனால், தான் கிருஷ்ண பகவான் பேசிய வார்த்தைகளும் நம்மை சிந்திக்க வைக்கிறது.

பேசாத மௌனமும் நம்மை சிந்திக்க தூண்டுகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் பேசிய ஆயிரம் வார்த்தைகளை விடவும் அவர் காத்த மௌனம் நமக்கு மிகப்பெரிய அளவில் பதில்களை விட்டுச் செல்கிறது.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US