அன்பிற்கும் அடிமைத்தனத்திற்கும் என்ன வித்தியாசம்? தெளிவை கொடுக்கிறார் கிருஷ்ண பகவான்

By Sakthi Raj Jun 04, 2026 10:00 AM GMT
Report

 இங்கு மனிதர்கள் நிறைய விஷயங்களை தவறாக புரிந்து கொள்வது உண்டு. அப்படியாக, பல நேரங்களில் நமக்கு அன்பிற்கும் அடிமைத்தனத்திற்கும் வேறுபாடு தெரிவது இல்லை. அந்த வகையில் கிருஷ்ண பகவான் நமக்கு அன்பு என்ன செய்யும்? அடிமை ஒரு மனிதனை என்ன செய்யும் என்பதை பற்றி பகவத் கீதையில் நமக்கு எடுத்துச் சொல்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

நம் மீது ஒருவர் அன்பு வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த அன்பு ஆனது நம்மை இக்கட்டான நிலையில் கைப்பிடித்து நிற்கும். எந்த சூழ்நிலையிலும் நம்மை அவமானம் செய்யாது. நாம் கஷ்டப்படுவதை கண்டு அவர்கள் மனம் தாங்காது.

அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் அவர்களுடைய இருப்பை மிகப்பெரிய அளவில் சக்தியாக கருதுவோம். ஆனால் இந்த அன்பில் அடிமைத்தனம் எங்கு துவங்குகிறது ?

அன்பிற்கும் அடிமைத்தனத்திற்கும் என்ன வித்தியாசம்? தெளிவை கொடுக்கிறார் கிருஷ்ண பகவான் | What Is True Love Says Krishna In Bagavat Gita 

தீட்டு என்றால் என்ன? தீட்டு இருந்தால் கோவிலுக்கு செல்லக் கூடாதா ?

தீட்டு என்றால் என்ன? தீட்டு இருந்தால் கோவிலுக்கு செல்லக் கூடாதா ?

ஒரு சிலர் அவர்களுடைய அன்பை நீ இதை செய்யவில்லை என்றால் நான் உன்னை விட்டு விலகி விடுவேன் என்பதை போல் குழப்பத்தில் வைத்திருப்பார்கள். நமக்கு அவர்களுடைய உறவு முறிந்து விட்டால் என்ன ஆகுமோ என்கின்ற ஒரு பயம் இருக்கும். இங்கு தான் கிருஷ்ண பகவான் அன்பிற்கும் அடிமைத்தனத்திற்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துரைக்கிறார்.

அதாவது அன்பு என்பது நம்மை பிடித்து நிற்கும் சக்தி என்றால், அடிமை என்றால் அந்த கையை விட பயப்படும் பலவீனம். ஆக நம்முடைய அன்பானது பற்றற்ற தன்மையில் இருக்க வேண்டும். எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பகவத்கீதை முழுவதும் பகவான் கிருஷ்ணன் நமக்கு உபதேசிப்பது எந்த பொருள்கள் மீதும் பற்றை வைக்காதீர்கள். பற்றின் காரணமாகத்தான் இந்த உலகத்தில் பல பிரச்சனைகள் துவங்குகிறது. ஆதலால், பற்றின்மையோடு வாழுங்கள் என்று நமக்கு சொல்கிறார்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US