முருக பக்தர்களுக்கு ஏன் அதிக அளவில் கோபம் வருகிறது?
ஆன்மீகம் என்பது ஓர் அனுபவம், ஆன்மீகம் என்பது ஒரு வழிகாட்டுதல். அப்படியாக, ஆன்மீகம் ஒரு மனிதனை நல்வழிக்கு அழைத்து செல்கிறது. வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்? இறைவனை சரண் அடைய வழி என்னவென்று ஆன்மீகம் நமக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது.
இருந்தாலும், என்னதான் நாம் இறைவழிபாட்டில் நம் மனதை செலுத்தினாலும், மனிதனுக்கான சில விஷயங்கள் சில நேரங்களில் நம்மை விட்டு விலகுவது இல்லை. அது தான் கோபம். உதாரணமாக, வீடுகளில் பூஜை அறையில் சுவாமி வழிபாடு செய்யும் பொழுது ஏதேனும் தொந்தரவுகள் ஏற்பட்டால் நாம் உடனே கோபம் கொள்வோம்.
உண்மையில், ஆன்மீகம் நமக்கு அதைக் கற்றுக்கொடுக்க வில்லையே. கோபம் தாபம் என்று எல்லாம் விடுதலே இறைப்பயணம். அப்படியாக, ஒருவரின் ஆன்மீக பயணம் எவ்வாறு அமைய வேண்டும் என்று ஆன்மீகம் மற்றும் இறைவழிபாட்டை பற்றி நம்மிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறார் ஆன்மீக பேச்சளாரும் முருகப் பக்தரான விஜயக்குமார் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







