இந்த கோவில்களில் மது தான் பிரசாதமே! எங்குள்ளது தெரியுமா?
பொதுவாக கோயில் வழிபாடுகளில் பிரசாதமாக நாம் சைவ உணவுகளையே படைத்து வழிபாடு செய்வதை பாத்திருப்போம். ஆனால், இந்தியாவில் ஒரு சில சக்தி வாய்ந்த கோயில்களில் பிரசாதமாக மாமிசம் மற்றும் மதுவை படைத்து வழிபாடு செய்கிறார்கள். அவை எந்த கோயில்கள் என்று பார்ப்போம்.
1. காமாக்யா கோயில் அசாம்:
51 சக்தி பீடங்களில் மிகவும் பழமையான மற்றும் சக்தி வாய்ந்த கோயிலாகும். இங்குள்ள அம்மனுக்கு அசைவ உணவுகளான ஆட்டு இறைச்சியும் சில நேரங்களில் மீன்களும் படைக்கப்படுகிறது. இந்த அசைவ உணவு வழிபாடுகளை கோயில்களில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலான காலத்தில் நடத்தப்படுகிறது. மேலும், இந்தஅசைவ உணவு பூஜையின் பொழுது பிரதான கதவுகள் மூடப்பட்டிருக்கும். இக்கோயிலில் படைக்கப்படும் பிரசாதமான அசைவ மற்றும் சைவ உணவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்ப்பது இல்லை.
2. தாராபித் ஆலயம், மேற்கு வங்காளம்:
மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் தாராபீத். இந்த கோயிலில் தாரா தேவியின் இரண்டு சிலைகள் உள்ளன. ஒன்று தாய் வடிவம், இரண்டாவது தேவியின் உக்ரமான வடிவம். மேலும், இக்கோயிலில் தாரா தேவிக்கு ஆட்டு இறைச்சி, மற்றும் மீன்களை மதுவுடன் சேர்த்து படைத்து வழிபாடு செய்கிறார்கள். மேலும், இங்கு படைக்கப்படும் பிரசாதம் பூஜை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
3. காளிகாட் காளி கோயில், மேற்கு வங்காளம்:
51 சக்தி பீடங்களில் மிகவும் விஷேசம் மற்றும் சக்தி வாய்ந்த மற்றொரு கோயில்காளிகாட் காளி கோயில் ஆகும். இங்கு தினமும் அம்மனுக்கு விலங்குகளை பலியிடம் வழிபாடு நடக்கிறது. இங்கு அம்மனுக்கு அசைவ உணவுகளை படைத்து வழிபாடு செய்யும் நிகழ்வுகள் நடப்பதோடு, இங்கு அசைவ உணவுகளை சமைத்து அதை பக்தர்ளுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
4. காலபைரவர் ஆலயம், மத்தியபிரதேசம்:
உஜ்ஜயினியில் உள்ள காலபைரவர் ஆலயம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற வழிபாட்டு தலம் ஆகும். இங்கு காலபைரவருக்கு பல ஆண்டு காலமாக மதுவை படைத்து வழிபாடு செய்யும் முறை கடைப்பிடிக்கபட்டு வருகிறது. பக்தர்கள் காலபைரவருக்கு படைக்கும் அந்த மதுவை அவர் ஏற்றுக்கொள்வதாகவும், பிறகு பூஜை முடிந்து வழிபாடு செய்யப்பட்ட மதுவை பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
5. முனியாண்டி கோயில் , தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள வடக்கம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் இக்கோயில் அமைந்து உள்ளது. இக்கோயிலில் 3 நாள் கொண்டாடப்படும் வருடாந்திர திருவிழாவில் 2000 கிலோ மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி படைத்து வழிபாடு செய்யும் நிகழ்வு நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முனியாண்டியின் அருளைப் பெற்று பிரசாதமாக பிரியாணி சாப்பிடுகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







