இந்த 3 ராசிகளுக்கு கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு: உங்க ராசியும் இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளும் இறைவனின் அருள் பெற்ற ராசிகள் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இறைவனின் துணையும் ஆசீர்வாதமும் எப்பொழுதும் இருக்குமாம். அதேப்போல், இவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டமும் ஈடுபாடும் இருக்கும்.
எப்பொழுதும் நேர்மறையான சிந்தனையும், நேர்மையும் கடைப்பிடிக்கும் இவர்களுக்கு இறைவன் துணை நின்று வழிநடத்துவாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த ராசியினர் எப்பொழுதும் பிறருக்காக உழைக்கும் குணம் படைத்தவராக இருப்பார்கள். அப்படியாக, எந்த ராசியினர் இறைவனின் அருள் பெற்றவர்கள் என்று பார்ப்போம்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் எப்பொழுதும் மிகுந்த ஆளுமையும் வசீகரமான தோற்றமும் படைத்தவர்கள். சிம்ம ராசியினருடன் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும், என்று பலரும் விருப்பம் கொள்வார்கள். இவர்கள் பிறர் முடிக்கமுடியாது என்று விலகி செல்லும் காரியத்தை எடுத்து முடித்து ஜெயித்து காட்டுவார்கள்.
மேலும், இவர்களுக்கு எப்பொழுதும் மனதில் இறைசிந்தனை இருப்பதோடு, இறைவன் அருளால் எவ்வளவு இக்கட்டான சூழலையும் எளிதில் கடக்கும் வாய்ப்புகள் உருவாகிறது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் சகிப்பு தன்மை கொண்டவர்கள். இவர்களுடன் பழகும் பொழுது நாம் எதார்த்தமான வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள முடியும். இவர்களிடத்தில் எப்பொழுதும் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கும்.
மனதில் வைராக்கியம் நிறைந்து காணப்படுவார்கள். இறைசக்தியால் இந்த உலகில் எதுவும் சாத்தியம் என்று தீர்க்கமாக நம்பக்கூடியவர்கள். இவர்களின் இந்த சிந்தனையே இறைவனின் ஆசீர்வாதத்தை எளிதாக பெற்றுக்கொடுக்கிறது.
துலாம்:
துலாம் ராசியினார் எப்பொழுதும் எதையும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படக்கூடிய ஆற்றல் உடையவர்கள். இவர்கள் எந்த செயலாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டோடு செயல்படக்கூடியவர்கள். இவர்களுக்கு தன்னை இயக்குவது கட்டாயம் இறைசக்தி என்று நம்பக்கூடியவர்கள்.
ஆதலால், எந்த ஒரு காரியமும் இவர்கள் இறைவனின் வேண்டுதல் இல்லாமல் செய்வது இல்லை. மேலும், இவர்கள் எந்த சூழ்நிலையிலும் பொய் பேசி சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். இந்த நல்ல குணங்கள் இவர்களுக்கு இறைவனின் முழு அருளையும் பெற்றுக் கொடுக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







