முருகர் வழிபாடு என்பது பல வருடங்களாக பின்பற்று பட்டு வருகிறது.முருகரை நினைத்து வழிபட நம் மனதில் உள்ள பாரம் துன்பம் எல்லாம் விலகி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் பெருகும்.
அப்படியாக சுரணை வதம் செய்த இடம் என்பதால் இந்த இடத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரும் என்று கூறப்படுகிறது.அப்படியாக திருச்செந்தூர் சென்றால் நாம் முருகரை எப்படி தரிசனம் செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு கோயில்களுக்கும் தனி சிறப்புகள் உண்டு.நம்முடைய வேண்டுதல் நிறைவேற அந்த கோயில்களில் முழு ஈடுபாட்டோடு மற்றும் முக்கியமான இடங்களை தரிசிப்பது அவசியம்.அப்படியாக திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு முன்பாக முக்கியமான இடத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான் வேண்டுதல் முழுமையாக நிறைவேறும். அந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்வோம். திருச்செந்தூருக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமை அன்று செல்வது சிறப்பாகும்.
இதற்கு காரணம் திருச்செந்தூர் என்பது குரு ஸ்தலமாக கருதப்படுவதுதான். அப்படி நாம் வியாழக்கிழமை முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு முன்பாக அங்கு இருக்கக்கூடிய மூவர் சமாதியை வழிபட வேண்டியது அவசியம் ஆகிறது.
திருச்செந்தூர் ஆலயத்தை கட்டியவர்கள் மொத்தம் ஐந்து பேர். அதில் மூன்று பேர் அந்த இடத்தில் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். அந்த ஜீவசமாதி இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை வழிபாடு செய்து அங்கு அமைதியாக அமர்ந்து தியானம் செய்து உங்களுடைய வேண்டுதலை நீங்கள் முன்வைத்த பிறகு முருகப்பெருமானை சென்று பார்த்தால் அந்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
மேலும் அந்த மூவர் சமாதிக்கு செல்லும் பொழுது வாசனை மிகுந்த ஊதுபக்தி ,வாசனை மிகுந்த பன்னீர் ரோஜாவை வாங்கிக் கொள்ள வேண்டும். அது மாலையாக இருந்தாலும் சரி உதிரியாக இருந்தாலும் சரி.
அடுத்ததாக ஒரு மண் அகல் விளக்கில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். நல்ல எலுமிச்சம் பழமாக மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கி வந்து அவர்களின் ஜீவசமாதியில் வைத்து உங்களுடைய வேண்டுதலை மனதார கூறிவிட்டு அதில் இருந்து ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் திரும்ப எடுத்து வர வேண்டும்.
திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு இந்த மூவர் சமாதி வழிபாடு செய்வது முக்கியம்.இவர்களை வழிபட கட்டாயம் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |