விநாயகர் சதுர்த்தி: வீடுகளில் எளிய முறையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறை
இந்துக்களில் எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும் விநாயகப் பெருமான் தான் முழு முதல் கடவுளாக போற்றி வழிபாடு செய்யப்படுகிறார். காரணம் இவரை வழிபாடு செய்து தொடங்கிய காரியம் எதுவும் தடைகளில் முடியாது என்பதே.
மேலும் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் விநாயகர் பெருமானைவழிபாடு செய்ய தொடங்குகிறார் என்றால் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடையப் போகிறார்கள் என்று அர்த்தம். விநாயகர் ஒருவர் வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களையும் தடைகளையும் தகர்த்து எறியக்கூடியவர்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகப் பெருமானை சிறப்பாக போற்றி வழிபாடும் செய்யும் முறையில் அவர் அவதரித்த தினத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியான ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது.
அன்றைய தினம் கட்டாயம் விநாயகப் பெருமானை வீடுகளிலும் கோவில்களிலும் சென்று வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள் அன்றைய தினம் விநாயகருக்கு உரிய தும்பை பூ, செம்பருத்தி பூ சங்குப்பூ, போன்ற 21 மலர்களை வைத்து வழிபாடு செய்யலாம். முடியாதவர்கள் கட்டாயம் வெள்ளை எருக்கம் பூ, அருகம்புல் ஆகிவை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அதோடு விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை பிரசாதத்தை படைத்து வழிபாடு செய்வது அவரை மனமகிழச் செய்யும்.
அதை தவிர மோதகம், லட்டு, அப்பம், பொறி கடலை, சுண்டல், பழங்கள் வெல்லம், வெள்ளை அவல், நெய் ஆகியவற்றில் நம்மால் எது முடிகிறதோ அதை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம், முடிந்தவர்கள் அனைத்தையும் படைத்து வழிபாடு செய்யலாம். பொதுவாகவே, இவ்வாறான பண்டிகைகளின் நோக்கம் நம் மனம் மகிழ்ச்சியோடு ஒருநாளையாவது இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்வதே ஆகும்.
ஆதலால் நம்முடைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப நம் பூஜை பொருட்களும் நெய்வேத்தியங்களும் படைத்து வழிபாடு செய்யலாம். இந்த பொருளை கொண்டு தான் கட்டாயம் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும் என்பது இல்லை.
வாழும் இந்த சிறிய காலத்தில் பண்டிகை தினங்களில் நம்மால் முடிந்த பொருட்களை வாங்கி இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தால்அவை நமக்கு மன மகிழ்ச்சியை தருவதோடு இறைவனின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







