வீடுகளில் குலதெய்வத்தின் படங்களை வைத்து வழிபாடு செய்யலாமா?
இந்துக்களில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அவர் அவர்களுக்கு உரிய குலதெய்வம் இருக்கிறார்கள். அந்த குலதெய்வம் தான் அந்த குடும்பத்தை காக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது.
மேலும், பிற தெய்வங்களுடைய அருள் நமக்கு இருந்தாலும் குலதெய்வத்தினுடைய அருள் இல்லை என்றால் குடும்பங்களில் செய்யக்கூடிய காரியங்களில் தடைகள் வருவதை நாம் பார்க்கலாம். அப்படியாக வீடுகளில் குலதெய்வத்தின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாமா?கூடாதா? என்ற சந்தேகம் இருக்கும். அதைப்பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒவ்வொரு கடவுள்கள் குலதெய்வமாக இருப்பார்கள். அதில் ஒரு சிலருக்கு உக்கிரமான தெய்வம் அவர்களுடைய குலதெய்வமாக இருக்கலாம். ஆக நம் வீடுகளில் உக்கிரமான குலதெய்வங்கள் படத்தை தவிர பிற தெய்வங்களுடைய புகைப்படத்தை கட்டாயம் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யலாம்.
இவை நமக்கு குலதெய்வத்தினுடைய அருளை எப்பொழுதும் பெற்றுக் கொடுக்கும். மேலும் சிலர் வேலை காரணமாக வெளிநாடுகளில் அல்லது வெளி மாநிலங்களில் வசிக்கும் நிலை ஏற்படும். அவர்களால் வருடம் ஒருமுறை அல்லது நினைத்த நேரத்தில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாது.
அவர்கள் கட்டாயம் வீடுகளில் குலதெய்வ படத்தை வைத்து வழிபாடு செய்து குலதெய்வத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் முடிந்த நெய்வேத்தியம் படைத்தும் முக்கிய நாட்களில் சர்க்கரை பொங்கல் படைத்தும் வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் குடும்பத்திற்கு குலதெய்வத்தின் பரிபூரண அருளும் ஆசீர்வாதமும் துணையும் எப்பொழுதும் கிடைக்கின்றது.
மேலும் நம் குடும்பங்களில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் பற்றிய முடிவெடுத்த பிறகு அல்லது முடிவெடுப்பதற்கு முன்னால் நம் குலதெய்வத்தினுடைய ஆசிர்வாதம் பெற்ற செய்வது நமக்கு நல்ல பலனை கொடுக்கும்.
மேலும், ஜாதகத்தில் ஒரு சிலருக்கு ஒரு சில கிரகங்கள் சாதகமாக நிலையில் இல்லாமல் இருக்கும். அப்பொழுது அவர்கள் வாழ்க்கையில் மிகவும் அவதிப்படும் நிலை உருவாகும்.
அந்த வேலையில் அவர்கள் குலதெய்வத்தைப் பற்றிக் கொண்டால் அவர்களுடைய கெட்ட நேரமும் அவர்களுடைய துன்பமும் குலதெய்வத்தின் அருளால் படிப்படியாக குறைந்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







