500 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தியில் உருவாகும் ராஜயோகம்
இந்து மதத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி என்று கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஆறு ராஜயோகங்கள் ஜோதிடத்தில் உருவாக உள்ளது.
முதலாவதாக கன்னி ராசியில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தால் உருவாக்கப்படும் தனயோகம், கடக ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகப் போகும் லட்சுமி நாராயண யோகம், குரு சந்திரனால் உருவாக இருக்கும் கஜகேசரி யோகம், சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் இருந்து உருவாக இருக்கும் ஆதித்த யோகம், ரவி யோகம், சுபயோகம் என்று ஆறு யோகங்கள் இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் உருவாகஉள்ளது.
இந்த யோகங்கள் குறிப்பிட்ட சில ஐந்து ராசிகளுக்கு வாழ்க்கையில் அவர்களுடைய துன்பங்களை போக்கி மகிழ்ச்சியையும் செல்வங்களையும் கொடுக்க காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.
கும்பம்:
உருவாக இருக்கும் இந்த ஆறு யோகங்கள் இவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் அவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் கொடுக்க காத்திருக்கிறது. இவர்கள் நீண்ட நாட்களாக வருமானத்தை இரட்டிப்பாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டம் இவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கபோகிறது. வியாபாரத்தில் அவர்கள் செய்யும் முதலீடுகள் அவர்களுக்கு ஏற்ற பலனையும் லாபத்தையும் கொடுக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் விலகி கணவன் மனைவி நல்ல அன்போடு வாழ போகிறார்கள்.
கடகம்:
கடக ராசி அவருக்கு இந்த ஆறு யோகங்கள் அவர்கள் வாழ்க்கையில் உள்ள மனக் கவலைகளை முதலில் போக்கக்போகிறது. நீண்ட வருடங்களாக போராடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை பிரச்சனைகளும் மனதில் உள்ள கஷ்டங்கள் விலக உள்ளது. பிள்ளைகளை பற்றிய கவலைக்கு ஒரு நல்ல முடிவை பெறுவீர்கள். பொருளாதாரத்தில் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து வருமானமும் நினைத்த இடத்தில் வேலையும் கிடைத்து முன்னேற போகிறார்கள். இவர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்கு விநாயக சதுர்த்தி அன்று நடக்க இருக்கும் ஆறு யோகங்கள் அவர்கள் வாழ்க்கையில் நல்ல தெளிவையும் வாழ்க்கைக்கு தேவையான நல்ல முடிவையும் எடுக்க அவர்களுக்கு வழி கொடுக்கப் போகிறது. மனதில் தைரியமும் நம்பிக்கையும் தோன்றி அவர்கள் வாழ்க்கையை போராடி ஜெயிப்பதற்கான ஞானத்தை வழங்கப்போகிறது. எதிரிகளால் இவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் விலகி எதிரிகள் முன்னால் இவர்கள் வாழ்ந்து காட்ட போகும் காலம் உருவாக உள்ளது.
சிம்மம்:
நீண்ட நாட்களாகவே சிம்ம ராசியினர் ஒரு சிலர் கவலைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எவ்வாறு மீண்டும் வரப் போகிறார்கள் என்று ஏளனமாக நினைத்தவர்கள் முன் சிம்ம ராசியினர் வாழ்ந்து காட்டும் காலகட்டம். மனதில் போராடி ஜெயித்திட வேண்டும் என்ற உறுதியான எண்ணம் எழப்போகும் காலம். குடும்பத்தினரும் துணைவியாரும் நல்ல ஆறுதலாகவும் உதவியாகவும் இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் இவர்களுக்கு வந்து சேரப்போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







