முருகப்பெருமானை எத்தனை முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்?
இறைவழிபாடு என்பது மனித உயிர்களை மேம்படுத்தும் ஒரு விஷயமாகும். அப்படியாக, ஒரு பொழுதும் ஆலயம் சென்று வழிபாடு செய்யும் பொழுதும் அவசர அவசரமாக சென்று வழிபாடு செய்யக்கூடாது.
நிதானமாக அமர்ந்து இறைவனுடன் உரையாட வேண்டும். நமது அன்றாட பிரச்சனைகள் தீர மன வலிமையை கொடு என்று உருகி வழிபாடு செய்யவேண்டும். மேலும், கோயில் சென்று வழிபாடு செய்யும் பொழுது கோயில் பிரகாரத்தை சுற்றி வழிபாடு செய்வது என்பது நமக்கு வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும்.
அந்த வகையில், எந்த கோயிலுக்கு சென்றால் எத்தனை முறை சுவாமியை வலம் வந்து வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
விநாயகர் கோயில்:
விநாயகர் வழிபாடு செய்யும் பொழுது ஒரு முறை சுற்றி வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் உள்ள தடைகள் எல்லாம் விலக அருள் புரிகிறார்.
முருகன் கோயில்:
கலியுக வரதன் என்று போற்றப்படும் முருகப்பெருமானை கோயிலில் ஆறு முறை சுற்றி வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை, மன வலிமை பிறக்கும் என்கிறார்கள்.
அம்பிகை கோயில்கள்:
தெய்வங்களில் அன்பு அரவணைப்பு கோபம் என்று எல்லாமே அதிக அளவில் வெளிப்படுத்தும் அம்பாளை கோயில்களில் ஐந்து முறை சுற்றி வலம் வரவேண்டும். இதனால் குடும்பத்தில் நிம்மதி. ஆரோக்கிய சிறப்பு மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.
அதோடு தொடர்ந்து வெள்ளி செவ்வாய் அன்று அம்பாள் ஆலயம் சென்று 5 முறை வலம் வந்து வழிபாடு செய்தால் எப்பேர்ப்பட்ட சிக்கலும் நம்மை விட்டு விலகும்.
சிவபெருமான் கோயில்:
சிவன் பெருமான் கோயில்களில் ஐந்துமுறை வலம் வரவேண்டும் இதனால் எண்ணியது நிறைவேறும். கர்ம வினைகள் அகலும்.
திருமால் கோயில்:
மகாவிஷ்ணுவை மூன்றுமுறை வலம் வரவேண்டும்.இதனால் ஆட்சி அதிகாரம் செல்வாக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும் நவக்கிரகங்கள்: நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றிவரவேண்டும். இதனால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |